Friday, July 31, 2015

இந்த அநியாயத்தை என்னவென்று சொல்வது?

 இந்த அநியாயத்தை என்னவென்று சொல்வது?
அவர்கள் ஆயுதம் ஏந்திப் போராடியபோது 
அவர்களை போராளிகள் என்றார்கள்
அவர்கள் மண்ணுக்காக மரணித்தபோது 
அவர்களை மாவீரர்கள்; என்றார்கள்
அவர்கள் துப்பாக்கியை மௌனித்தபோது 
அவர்களை முன்னாள் போராளிகள் என்றார்கள்
அவர்கள் தேர்தலில் தமக்கும் சீட் கேட்டதும் 
அவர்களை அரசின் ஏஜென்டுகள் என்று
சிறீதரன் எம்.பி சொல்லுகிறார்கள்
இந்த அநியாயத்தை என்னவென்று சொல்வது?
தமக்கு எம்.பி பதவி தேவை என்றபோது 
பிரபாகரன் தேசிய தலைவர் என்றார்கள்
புலிகளே ஏக பிரதிநிதி என்றும் கூறினார்கள்
தற்போது புலிகள் இல்லை என்றவுடன்
பிரபாகரன் பயங்கரவாதி என்கிறார்கள்
புலிகளின் எச்சங்கள்கூட தேவையில்லை என்று
தலைவர் சம்பந்தர் அய்யா சொல்கிறார்கள்
இந்த அநியாயத்தை என்னவென்று சொல்வது?
தமிழர்கள் வோட்டால் ஜனாதிபதியான
மைத்திரியின் 100 நாள் ஆட்சியில்
கைதிகள் விடுதலை செய்யும்படி கோரவில்லை
மீள் குடியேற்றம் செய்யும்படி கேட்கவில்லை
காணாமல் போனோரையும் கண்டுபிடிக்கவில்லை
ஆனால் ,
சுமந்திரன் தனக்கு சொகுசு வாகனம் வாங்கியுள்ளார்
சுரேஸ் பிரேமச்சந்திரன் பணம் வாங்கியுள்ளார்
இதனை முதல்வர் விக்கி பகிரங்கமாக கூறியுள்ளார்.
ஆனந்தி மீது நடவடிக்கை எடுத்த மாவையார்
முதல்வர் விக்கி மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த அநியாயத்தை என்னவென்று சொல்வது?

No comments:

Post a Comment