Friday, August 31, 2018

பூனைகளின் ராஜ்ஜியத்தில் எலிகள் பூனைகளுக்காக படைக்கப்பட்டது என்பதே நீதி.

பூனைகளின் ராஜ்ஜியத்தில் எலிகள் பூனைகளுக்காக படைக்கப்பட்டது என்பதே நீதி.
அதேபோல் இலங்கை மீதான இந்திய ஆக்கிரமிப்பு நீதியானது என்பது இந்திய ஆக்கிரமிப்பாளர்களின் கருத்தாகும்.
அவ்வாறு எழுதி வந்திருக்கும் நூல்தான் “ஓர் இனப் பிரச்சனையும் ஓர் ஒப்பந்தமும்”
இந்து பத்திரிகையின் நிருபரான தி.ராமகிருஸ்ணன் என்பவரால் எழுதி வெளியிடப்பட்டுள்ள நூல் இது.
இந்த நூல் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது. கொழும்பில் வெளியிடப்பட்டது.
அவ் வெளியீட்டுவிழாவில் முன்னாள் மற்றும் இந்நாள் முதலமைச்சர்கள், எதிர்கட்சி தலைவர் சம்பந்தர் அய்யா, கூட்டமைப்பு பேச்சாளர் சுமந்திரன் என பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.
ஆனால் இவர்களில் ஒருவர்கூட இந் நூல் ஆசிரியருக்கு பதில் சொல்லவில்லை அல்லது பதில் சொல்ல விரும்பவில்லை என்பது வேதனையாகும்.
ஈழத் தமிழர்களின் போராட்டத்திற்கு எதிராக புத்தகம் எழுதி அதை ஈழ மண்ணில் அதுவும் ஈழத் தலைவர்கள் முன்னிலையில் வெளியிடும் தைரியம் இவ் ஆசிரியருக்கு எப்படி வந்தது?
ஒரு புத்தக ஆசிரியருக்கூட பதில் சொல்ல முடியாத அளவிற்கா எமது போராட்டம் பலவீனமாக இருக்கிறது?
ஆங்கிலேய சிப்பாய்கள் பஞ்சாபில் நடத்திய ஜாலியன்வாலா படுகொலைகளை இன்றும் இந்திய அரசு நினைவு கூருகிறது.
ஆனால் இந்திய படைகள் ஈழத்தில் நடத்திய படுகொலைகளை ஈழத் தமிழர்கள் நினைவு கூருவதை அது தடுக்கிறது.
ஜாலியன்வாலா படுகொலையை நடத்திய ஆங்கிலேய அதிகாரியை லண்டன் சென்று படுகொலை செய்த உத்மம் சிங்கை “தியாகி” என்று இந்திய அரசு போற்றுகிறது.
ஆனால் ஈழப் படுகொலைகளுக்கு காரணமான ராஜீவ்காந்தியைக் கொன்ற தானுவை பயங்கரவாதி என்கிறது அதே இந்திய அரசு.
இந்த இந்திய ஆக்கிரமிப்பு அரசு தனக்கொரு நியாயம் ஈழத்தமிழர்களுக்கு இன்னொரு நியாயம் என நடந்து கொள்கிறது.
அதையே தமிழர் என்று தன்னைக் கூறிக்கொள்ளும் தி.ராமகிருஸ்ணனும் புத்தகமாக எழுதி தமிழர்களுக்கு விற்க வந்திருக்கிறார்.
ஆசிரியர் ராம் மட்டுமல்ல அவரது இந்து பத்திரிகை மொத்தமும் ஒருபோதும் ஈழத் தமிழர்களுக்கு நியாயமாக நடந்து கொள்ளாது என்பதற்கு இந்த நூல் ஒரு சிறந்த உதாரணமாகும்
.
படிக்க வேண்டிய நூல் அல்ல கொளுத்த வேண்டிய நூல் இது!
குறிப்பு- ஒவ்வொரு சொல்லின் பின்பும் ஒரு வர்க்கத்தின் நலன் ஒளிந்திருக்கும்- தோழர் லெனின்.

No comments:

Post a Comment