Friday, August 31, 2018

•வாஜ்பேய் நல்லவரா?

•வாஜ்பேய் நல்லவரா?
வாஜ்பேய் நல்லவர். ஆனால் தவறான கட்சியில் இருந்தார் என்கிறார்கள்.
ஒரு நல்லவர் எப்படி தவறான கட்சியில் இருக்க முடியும்? என்று கேட்டால் அவர் ஒரு சுதந்திர போராட்ட வீரர் என்கிறார்கள்.
காட்டிக் கொடுத்தவர் எப்படியடா சுதந்திர போராட்ட வீரர் என்று அழைக்கலாம்? என்று கேட்டால் பதில் சொல்லாமல் முழிக்கிறார்கள்.
இதோ நீதிமன்றத்தில் வாஜ்பாய் கொடுத்த வாக்குமூலம்,
"எனது தந்தை பெயர் கவுரிசங்கர். நான் குவாலியர் கல்லூரியில் படித்துள்ளேன். நான் பிராமண சமூகத்தை சேர்ந்தவன்.ஆக்ரா மாவட்டம் பட்டேஸ்வர் கிராமத்தை சேர்ந்தவன்.
1942 ஆகஸ்ட் 27ம் தேதி மதியம் 2 மணி இருக்கும். காகு,மகுன் என்ற இருவரும் ஊர்ச்சாவடி அருகில் வந்தனர் வனத்துறை அலுவலகத்தை உடைக்கவேண்டும் என மக்களிடம் வேண்டுகோள் விடுத்தனர். இருநூறுக்கும் மேற்பட்டோர் திரண்டனர்.
நானும், எனது தம்பியும் பின் தொடர்ந்து சென்றோம். பாதி தூரம் சென்றதும் நின்று கொண்டோம்.
வனத்துறை அலுவலகம் இடிக்கப்பட்டது .உடைந்த செங்கல்கள் விழுவதைப் பார்த்தோம்.ஆடு,மாடுகளை அவிழ்த்துவிட்டனர். தடுப்புகள் உடைக்கப்பட்டது. நாங்கள் அருகில் செல்லவில்லை. காகு,மகுன் மற்றும் ஊர் மக்கள்தான் இதற்குக் காரணம்."
இந்த வாக்குமூலத்திற்குப்பிறகு அந்த ஊர் என்ன கதியானது தெரியுமா?
வாஜ்பாய் நீதிமன்றத்தில் ஊர் மக்களைக் காட்டிக்கொடுத்து வாக்குமூலம் கொடுத்தவுடன் பட்டேஸ்வர் கிராமத்தை போலீஸ்
சுற்றி வளைத்தது.
263 வீடுகள் முற்றிலுமாக அடித்து நொறுக்கப்பட்டது. காகு,மகுன் ஆகிய இருவரும் இரும்புச்சங்கிலியால் கட்டி இழுத்துச்செல்லப்பட்டனர். 300 க்கும் மேற்பட்ட மக்கள் கைது செய்யப்பட்டுசித்தரவதை
செய்யப்பட்டனர்.
காகு,மகுனுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.ஊருக்கு 10,000 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
65 ஆண்டுகளுக்கு முன்பு அந்தத்தொகை மிகப்பெரியது. ஊர் மக்களால் கட்ட முடியவில்லை. எனவே பொதுமக்கள் மேலும் சித்ரவதை செய்யப்பட்டனர்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அந்த ஊரில் முஸ்லிம் களோ, கிறிஸ்தவர்களோ யாரும் இல்லை. முற்றிலும் இந்து மக்கள் தான்.
அந்த இந்து மக்களை காட்டிக் கொடுத்தவர்தான் இந்து தலைவர் வாஜ்பேய். காட்டிக் கொடுத்ததற்கு அவருக்கு பாரதரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.
அதேநேரம் தமிழ்நாட்டில் ஒரு இளைஞர் கைது செய்யப்பட்டார். கூட இருந்தவர்களை காட்டித் தரும்படி அவருக்கு சித்திரவதை செய்யப்பட்டது. அவரது மீசை மயிர்கள் தீயினால் சுடப்பட்டது. ஆனாலும் அவர் சிறைவாசத்தை அனுபவித்தார்.
அந்த இளைஞர் கம்யுனிஸ்ட் கட்சி தலைவர் நல்லகண்ணு. அவருக்கு பாரத ரத்னா விருதும் இல்லை. அவர் இன்றைக்கும் அரச மருத்துவமனையில்தான் சிகிச்சை பெறுகிறார்.

No comments:

Post a Comment