Friday, August 31, 2018

•வாஜ்பேய் மரணமும் ஈழத் தமிழர்களும்!

•வாஜ்பேய் மரணமும் ஈழத் தமிழர்களும்!
முன்னாள் பிரதமர் வாஜ்பேய் மரணமடைந்துள்ளார்.
இனி ஒரு கூட்டம் முகநூலில் வரும்.
அது “தவறான கட்சியில் இருந்த நல்ல மனிதர் வாஜ்பேய்” என்று முதலில் எழுதும்.
அடுத்து “கலைஞரின் டெசோ மாநாட்டில் பங்குபற்றி தமிழீழத்தை ஆதரித்த தலைவர் வாஜ்பேய்” என்று எழுதும்.
இறுதியாக “ வாஜ்பேய் இருந்திருந்தால் தமிழீழம் கிடைத்திருக்கும்” என்று எழுதும்.
உடனே அதை நம்பி சில வரலாறு தெரியாத ஈழத் தமிழர்களும் வாஜ்பேய்க்கு அஞ்சலி செலுத்துவார்கள்.
என்னடா இது வரலாற்றையே தலைகீழாக மாற்றுகிறீர்களே என்று கேட்டால் “ இறந்த மனிதரைப் பற்றி விமர்சிப்பது தமிழர் பண்பாடு இல்லை” என்பார்கள்.
சரி பரவாயில்லை என்னவென்டாலும் சொல்லிவிட்டுப் போங்கடா. ஆனால் குறைந்த பட்சம் இந்த சில கேள்விகளுக்கு உங்கள் பதில் என்ன என்பதையாவது சொல்லுங்கடா.
(1) புலிகள் யாழ்ப்பாணத்தை பிடிக்க இருந்தபோது அதை தடுத்து நிறுத்தியது யார்? யாழ் குடா நாட்டில் இருந்த பத்தாயிரம் சிங்கள ராணுவத்தை காப்பாற்றியது யார்?
(2) வாஜ்பேய் பிரதமராக இருந்தபோது இலங்கை ராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சி கொடுக்கப்படவில்லையா?
(3) வாஜ்பேய் பிரதமராக இருந்தபோது தமிழக மீனவர்களைக் கொன்ற இலங்கை கடற்படைக்கு இந்திய அரசு உதவி செய்யவில்லையா?
(4) கலைஞரின் டெசோ மாநாட்டில் தமிழீழத்தை ஆதரித்த வாஜ்பேய் பிரதமரானதும் தமிழீழத்தை மறுத்தது ஏன்?
(5) வாஜ்பேய் பிரதமராக இருந்தபோது தமிழகத்தில் இருந்த அகதிகளுக்கு செய்த உதவி என்ன? குறைந்தபட்சம் சிறப்புமுகாமையாவது மூடுவதற்கு அவர் முனையாதது ஏன்?
இப்ப சொல்லுங்கடா, ஈழத் தமிழன் ஏன் வாஜ்பேய்க்கு அஞ்சலி செலுத்த வேண்டும்?

No comments:

Post a Comment