Friday, October 31, 2014

மலையக தமிழர்களின் தொடரும் துயரம்!

• மலையக தமிழர்களின் தொடரும் துயரம்!
பதுளையில் ஏற்பட்ட மண் சரிவில் இதுவரை
• 10 தமிழர்கள் சடலஙடகளாக மீட்பு
• 300 பேர் வரையில் இறந்திருக்கலாம் என ஊகிப்பு
• 600பேர் புதையுண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஒவ்வொரு வருடமும் அந்த மக்களை இவ்வாறான துயர சம்பவங்கள் தொடருகின்றன. ஆனால் எந்த அரசும் அந்த மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளைக்கூட செய்து கொடுக்காமல் புறக்கணித்து வருகின்றன.
ஆங்கிலேயர் காலத்தில் தேயிலை தோட்டத்தில் வேலை செய்வதற்காக இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட தமிழ்மக்கள் மலையகத்தில் குடியமர்த்தப்பட்டனர். அன்று ஆங்கிலேயர் அமைத்து கொடுத்த லயன் வீடுகளிலேயே இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எந்தவித அபிவிருத்தியும் இவர்களுக்கு இதுவரை செய்து கொடுக்கப்படவில்லை.
மலையகத்தில் இருக்கும் இந்த பத்து லட்சம் தமிழர்கள் “தமிழீழ” தனி நாடு கோரவில்லை. இருப்பினும் இவர்கள் தமிழர்கள் என்பதால் இலங்கை அரசு தொடர்ந்து இவர்களை புறக்கணித்தும் கொடுமைப்படுத்தியும் வருகிறது.
அனைத்து மலையக தமிழ் மக்களுக்கும் தற்போது பிராஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளது. இது ஒன்றுதான் இலங்கை அரசால் அந்த மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் ஒரேயொரு சலுகையாகும். அதுகூட வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் போராட்டத்தினால் விளைந்த ஒரு நன்மையாகும்.
இலங்கையின் அதிக ஏற்றுமதி வருமானத்தை ஈட்டிக்கொடுக்கும் இந்த மலையக மக்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்காமல் தொடர்ந்து புறக்கணித்து வருவது அவர்களுக்கு இழைக்கப்படும் மிகப் பெரிய கொடுமையாகும். மனித இனம் வெட்கி தலைகுனிய வேண்டிய நிலையிலேயே அவர்கள் வைக்கப்ட்டிருக்கின்றனர்.
மலையக தமிழ்மக்கள் தங்கள் உரிமைகளையும் அடிப்படை வசதிகளையும் பெற்றுக்கொள்ள வடக்கு கிழக்கு தமிழ் தலைமைகள் மட்டுமல்ல தமிழகத்தில் இருக்கும் தமிழ் தலைமைகளும் குரல் கொடுக்க வேண்டும்.
மலையக மக்கள் தமிழர்கள் மட்டுமல்ல அவர்களும் மனிதர்களே!

No comments:

Post a Comment