Friday, October 31, 2014

ஜெயா அம்மையார் சிறையின் கொடுமையை உணர்ந்து கொள்வாரா?

ஜெயா அம்மையார் சிறையின் கொடுமையை உணர்ந்து கொள்வாரா?
இதுவரை பலரையும் சிறையில் அடைக்க காரணமாய் இருந்தவர்
பல அப்பாவிகளின் ஜாமீன் விடுதலையை மறுத்தவர்
இப்பொது அவரே சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
இப்போது அவரே ஜாமீன் விடுதலையை கோருகிறார்
இதோ படத்தில் இருக்கும் தென்தமிழன்
20 வருடம் சிறையில் கழித்த பின்பும் கூட
அவரை விடுதலை செய்ய ஜெயா அரசு மறுத்தது.
மனநோயால் பாதிக்கப்பட்ட அவரை சிகிச்சைக்காக
நீதிமன்றம் விடுதலை செய்த போதும்
ஜெயா அரசு கடுமையாக எதிர்த்தது.
இன்று அதே ஜெயா அம்மையார்
20 நாட்களே சிறையில் இருந்துள்ளார்
அதற்குள் பல சுகயீனங்கள் கூறி
ஜாமீனில் விடுதலை கோருகிறார்.
தர்மபுரியில் ஆறு அப்பாவி இளைஞர்கள்
மரீனா கடற்கரையில் பயிற்சி எடுத்ததாக
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைத்தது ஜெயா அரசு.
பத்திரிகைகள் மனித உரிமை அமைப்புகள் இது பொய் வழக்கு என்றன.
இருப்பினும் வழக்கை வாபஸ் பெற மறுத்தது ஜெயா அரசு.
இறுதியில் உயரநீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.
மதுரையில் சில இளைஞர்களை கைது செய்து
ஆறுமாதம் கழித்து அவர்கள் மீது தேசியபாதுகாப்புசட்டம்
போட்டது ஜெயா அரசு.
இவ்வாறு அப்பாவிகளை கைது செய்து
அவர்களமீது கறுப்பு சட்டங்களை போட்ட ஜெயா அம்மையார்
இன்று தன்மீது பொய்வழக்கு போடப்பட்டதாக கூறுகிறார்.
தனக்கு ஜாமீன் விடுதலை அளிக்கும்படி கோருகிறார்.
இந்த சிறைவாழ்க்கை அவர் தம் தவறுகளை உணர வைக்குமா?
இனியாவது சிறையின் கொடுமை அவரை திருந்த வைக்குமா?

No comments:

Post a Comment