Thursday, October 9, 2014

ஜெயா அம்மையாருக்காக லண்டனில் குரல் கொடுத்த ஞாயம்மாரே, உங்கள் மனட்சாட்சிக்கு சில கேள்விகள்!

ஜெயா அம்மையாருக்காக லண்டனில் குரல் கொடுத்த
ஞாயம்மாரே, உங்கள் மனட்சாட்சிக்கு சில கேள்விகள்!
• காரைநகரில் பள்ளி சிறுமிகளை கற்பழித்த வீரர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த கடற்படை மறுக்கிறதே. அதற்காக குரல் கொடுத்தீர்களா?
• கிளிநொச்சியில் கைது செய்த தாய் ஜெயக்குமாரி மீது நீதிமன்றம் வலியுறுத்தியும்கூட இலங்கை அரசு வழக்கு தாக்கல் செய்யாது அடைத்து வைத்திருக்கிறதே. அதற்காக குரல் கொடுத்தீர்களா?
• சப்பிரமுகா பல்கலைகழக தமிழ் மாணவனை கைது செய்து இரகசியமாக அடைத்து வைத்திருக்கும் இலங்கை அரசுக்கு எதிராக சிங்கள மாணவர்கள்கூட போராடுகின்றனர். ஆனால் நீங்கள் ஏன் அதற்காக குரல் கொடுக்கவில்லை?
• இன்றும்கூட பல தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை தேடி அலைகிறார்களே. அந்த தாய்மார்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தீர்களா?
• இலங்கை அரசுக்கு எதிராக குரல் கொடுக்காவிட்டாலும்கூட இங்கிலாந்து அரசு அகதிகளை பலவந்தமாக திருப்பி அனுப்புவதற்கு எதிராகாவது குரல் கொடுத்தீர்களா?
இவை எதற்கும் குரல் கொடுக்காமல் மௌனமாக இருந்த நீங்கள் இன்று எதற்காக ஜெயா அம்மையாருக்காக குரல் கொடுக்கிறீர்கள்?
ஜெயா அம்மையார் ஈழத் தமிழர்களுக்கு உதவிய ஈழத்தாய் என்கிறீர்களே
• அந்த தாய் சிறப்புமுகாமில் அடைத்து வைத்திருக்கும் அகதிகளை விடுதலை செய்ய மறுப்பதை நீங்கள் அறிவீர்களா?
• அந்த தாய் வழக்கின் இறுதி நேரத்தில்கூட விடுதலைப் புலிகளால் தனது உயிருக்கு ஆபத்து என்று கூறியதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?
மக்கள் பணத்தை சுருட்டிய ஒரு ஊழல் குற்றவாளியை ஈழத்தாய் என்று அழைப்பதும் அவரை விடுதலை செய்யக் கோருவதும் எந்தளவு கேவலமானது என்பதை நீங்கள் உண்மையிலே உணரவில்லையா?

No comments:

Post a Comment