Wednesday, September 30, 2015

• இவைகள் இனப்படுகொலைகள் இல்லையா?

• இவைகள் இனப்படுகொலைகள் இல்லையா?
இன ஒடுக்குமுறை உள்ள ஒரு நாட்டில்
இனக் கலவரங்கள் நடந்த ஒரு நாட்டில்
இனவாத ஆட்சியாளர்களால் நடந்த கொலைகள்
இனப்படுகொலைகள் அன்றி வேறு என்ன?
கொசவோவில் 4 ஆயிரம் மக்கள் படுகொலை செய்யப்பட்டது இனப்படுகொலையாம் ஆனால் இலங்கையில் 40 ஆயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது வெறும் போர்க்குற்றமாம்.
ஒருவேளை வன்னியில் எண்ணெய் கிணறு இருந்திருந்தால் இவர்களுக்கு இது இனப்படுகொலையாக தெரிந்திருக்குமா?
கொலை செய்த குற்றவாளிகளையே நீதிபதியாக இருந்து விசாரணை செய்யும்படி கேட்கும் அதிசயம் இலங்கை விடயத்தில் ஜ.நா எமக்கு வழங்கும் நியாயம். இந்த கொடுமையை என்னவென்று அழைப்பது?
இன அழிப்பிற்கு துணை போன இந்தியாவிடம் நியாயம் வழங்குமாறு கேட்பது,
தனது சொந்த மக்களையே கொன்று குவிக்கும் இந்திய அரசிடம் மனிதாபிமானம் எதிர்பார்ப்பது,
வியட்நாமில், அப்கானிஸ்தானில், ஈராக்கில் மக்களை கொன்ற அமெரிக்கா இலங்கையில் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்க வழி செய்யும் என நம்புவது,
இலங்கை அரசிற்கு ஆயுதம் வழங்கிய பிரிட்டனிடம் தமிழர்களுக்கு ஆதரவு தரும்படி கேட்பது,
இத்தகைய முட்டாள் தனங்களை என்னவென்று அழைப்பது?
ஒரு வருடத்தில் தீர்வு பெற்று தருவோம் என்ற தமிழ்தேசிய கூட்டமைப்பினர் இன்று நடந்தது இனப்படுகொலைகள் அல்ல அதற்கு சாட்சியும் இல்லை என்று ஏமாற்றுவதை என்னவென்பது?

No comments:

Post a Comment