Wednesday, September 30, 2015

• லண்டனில் நடைபெற்ற தோழர் வைத்திலிங்கம் அவர்களின் நூற்றாண்டு விழா

• லண்டனில் நடைபெற்ற தோழர் வைத்திலிங்கம் அவர்களின் நூற்றாண்டு விழா
கடந்த 12.09.15 யன்று லண்டன் ஈஸ்ட்காம் நகரில் மாலை 6 மணியளவில் தோழர் வைத்திலிங்கம் அவர்களின் நூற்றாண்டு விழா நடைபெற்றது.
இலங்கை கம்யுனிஸ் கட்சி ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரான காலம்சென்ற தோழர் வைத்திலிங்கம் அவர்களின் பிறந்ததின நூற்றாண்டு விழா அவரது கட்சியை சேர்ந்த குகதாசன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
அரசியல் விமர்சகர் மு. சிவலிங்கம் அவர்கள் விழாவை வழி நடத்தினார். விரிவுரையாளர் நித்தியானந்தன் நூலை வெளியிட்டு உரையாற்றினார்.
நோர்வேயில் இருந்து வந்திருந்த ஆதித்தன் ஜெயபாலன் நினைவுப் பேருரை நிகழத்தினார்.
சட்டத்தரணி பசீர் மற்றும் உரும்பராய் இந்துக்கல்லூரி , யாழ் இந்துக்கல்லூரி பிரதிநிதிகளும் உரையாற்றினார்கள்.
இலங்கை கம்யுனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் டி.யு குணசேகரா தவிர்க்க முடியாத காரணத்தால் கலந்து கொள்ளவில்லை. எனவே அவரது வாழ்த்து செய்தியை "தமிழ் ரைம்ஸ்" ஆசிரியர் இராஜநாயகம் அவர்கள் வாசித்தார்.
மூத்த ஊடகவியலாளர் மாலிங்கசிவம் அவர்களும் கலந்துகொண்டு உரையாற்றினார்.
இரவு 10 மணியளவில் கூட்டம் நிறைவு பெற்றது. பல இடதுசாரி உணர்வாளர்கள் இக் கூட்டத்தில் கலந்துகொண்டது சிறப்பம்சமாகும்.

No comments:

Post a Comment