Wednesday, September 30, 2015

லண்டனில் நடைபெற்ற மாவை சேனாதிராசாவின் இரகசிய கூட்டம்

• லண்டனில் நடைபெற்ற மாவை சேனாதிராசாவின் இரகசிய கூட்டம்
இன்று 27.09.15 மாலை 6 மணிக்கு லண்டனில் ஈஸ்ட்காம் நகரில் மாவை சேனாதிராசா அவர்களின் இரகசிய கூட்டம் நடைபெற்றது.
தமிழ்தேசியகூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் ஆதரவாளர்களுக்குமான கூட்டம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆச்சரியம்!
தமிழரசுக்கட்சியின் தலைவர், தமிழ் தேசியகூட்டமைப்பின் உபதலைவர், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தாங்களே எனக்கூறும் மாவை சேனாதிராசா அவர்கள், லண்டன் வாழ் தமிழ் மக்களை சந்திக்கும் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தாதது ஆச்சரியமளிக்கிறது.
எரிச்சல்!
கூட்டம் 4.30 மணிக்கு என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 6 மணிக்குதான் ஆரம்பமானது. 8 மணிக்கு கூட்டம் முடிவுற்றது.
வெள்ளைக்காரனைப் பார்த்து கோட்டு சூட்டு போடும் இந்த கணவான்கள் வெள்ளைக்காரனின் பங்சுவாலிட்டியை எப்பதான் பின்பற்றப்போகிறார்களோ தெரியவில்லை.
ஏமாற்றம்!
(1) ஒரு வருடத்திற்கு தீர்வு பெற்றுத் தரப்படும் என தேர்தலின் போது சம்பந்தர் அய்யா கூறியிருந்தார். அவ்வாறு தீர்வு பெறுவதற்கு என்ன முயற்சிகள் எடுக்கப்படுகின்றன என்பது குறித்தோ அல்லது அவ்வாறு தீர்வு கிடைக்காவிடின் என்ன போராட்டம் முன்னெடுக்கப்படும் என்பது குறித்தோ மாவையார் தன் பேச்சில் குறிப்பிடாதது ஏமாற்றமாக இருந்தது.
(2) தமிழ் மக்கள் தங்களை நம்புவதாகவும் தாங்கள் அமெரிக்காவை நம்புவதாகவும் அவர் தன் பேச்சில் குறிப்பிடட்டார். அமெரிக்கா ஏமாற்றினால் என்ன செய்வது என்பது குறித்து அவர் எதுவும் கூறவில்லை.
1983க்கு முன்னர் இலுப்பம்பழம் பழுத்தால் வெளவால் வரும் என்றும் இந்திய வெளவால் வந்து உதவி செய்யும் என்று கூறிய மாவையார் தற்போது அமெரிக்க வெளவால் வரும் என்கிறார். அடுத்த தேர்தலுக்கு Nவுறு ஏதாவது வெளவாலை காட்டி பதவியை பெறுவார் போலும்.
(3) சிறையில் உள்ளவர்களின் விடுதலை, அகதிகளின் மீள் குடியேற்றம் என்பன குறித்து அரசிடம் பல முறை கேட்டுவிட்டோம். ஆனால் அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது நாங்கள் என்ன செய்யமுடியும்? என மாவையார் கேட்கிறார். அப்படியென்றால் அரசிடம் இது குறித்து எந்த வாக்குறுதியும் பெறாமல் ஏன் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கப்பட்டு வருகிறது என்பது குறித்து அவர் எதுவும் கூற மறுக்கிறார்.
கோபம்!
மக்கள் துன்பத்தை அனுபவிக்கும்போது அது குறித்து எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்காமல் உலக சுற்றுலா மேற்கொள்ளும் மாவையாருக்கு ஒருவர் பொன்னாடை போர்த்தியதும் மாலை அணிவித்ததும் மிகுந்த கோபத்தை வரவழைக்கிறது. இந்த வாலுகள் லண்டனிலும் இந்த பொன்னாடை கலாச்சாரத்தை கொண்டு வநதுவிட்டார்களே!

No comments:

Post a Comment