Wednesday, September 30, 2015

சம்பந்தர் அய்யா அவர்களே!

• சம்பந்தர் அய்யா அவர்களே!
இந்த குழந்தைகளுக்காவது கொஞ்சம் இரக்கம் காட்டமாட்டீர்களா?
குழந்தைகள் என்றால் எந்த கல் நெஞ்சும் இரங்கும் என்பார்களே.
தமது தந்தையரை விடுதலை செய்யுமாறு இந்தக் குழந்தைகள் கெஞ்சுவது உங்களுக்கு தெரியவில்லையா?
உங்களுக்கு வாக்களித்த மக்கள் தங்கள் உறவினர்களின் விடுதலைக்கு வழி செய்வீர்கள் என்று நம்பியிருப்பது தெரியவில்லையா?
நீங்கள் எதிர்கட்சி தலைவர் பதவி எடுப்பதற்காகவா இந்த மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்கள்?
21 வருடங்களுக்கு மேலாகவும் சிறையில் வாடுகிறார்களே, அவர்களின் விடுதலைக்கு உங்களால் ஏன் குரல் எழுப்ப முடியவில்லை.
சிறையில் உள்ளவர்களையே உங்களால் விடுதலை செய்யமுடியாவிடின் ஒருவருடத்திற்கள் இனப்பிரச்சனைக்கு எப்படி தீர்வு பெறப்போகிறீர்கள்?
நீங்கள் உங்கள் குடும்பம் குட்டிகளுடன் இந்தியாவில் சொகுசாக வாழ்கிறீர்கள். ஆனால் உங்களை நம்பிய குழந்தைகள் வீதியில் இறங்கி போராடுகிறார்கள்.
உங்களால் சிறையில் உள்ளவர்களை விடுவிக்க முடியாவிடினும் இந்த குழந்தைகளை சந்தித்து ஆறுதல் சொல்லவும் முடியவில்லையா?
பாடையில் போகவேண்டிய உங்களுக்கு பாராளுமன்ற பதவி எதற்கு என்று இந்த குழந்தைகள் நினைக்கு முன்னர் உங்களால் இயன்றதை தயவு செய்து செய்யுங்கள்.
குழந்தைகளின் சாபத்தை சம்பாதிக்காதீர்கள்!

No comments:

Post a Comment