Tuesday, November 18, 2014

சாதி, இனம், வர்க்கம் இவை பற்றி சோசலிஸ்ட்டுகள் சொல்வது என்ன?

 சாதி, இனம், வர்க்கம் இவை பற்றி
சோசலிஸ்ட்டுகள் சொல்வது என்ன?
இன்று (08.11.2014) மாலை 3.00 மணியளவில் மத்திய லண்டனில் உள்ள ல் “சாதி இனம் வர்க்கம் இவை பற்றி சோசலிஸ்டுகள் சொல்வது என்ன?” என்ற தலைப்பில் பொதுக்கூட்டமும் கலந்துரையாடலும் நடைபெற்றது.
சோசலிசம் 2014 நிகழ்வின் ஒரு பகுதியாக இக்கூட்டத்தை தமிழ் சொலிடாறிற்றி ஒழுங்கமைத்திருந்தது. மார்வின் கே தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் சேனன் மற்றும் மீனா கந்தசாமி ஆகியோர் உரையாற்றினார்கள்.
மீனா கந்தசாமி தனது உரையில் வர்க்கப் பார்வையில் இந்தியாவின் சாதீயம் குறித்து விளக்கினார். அவர் தனக்கு அளிக்கப்பட்ட குறுகிய நேரத்தில் தன்னால் இயன்றளவு தகவல்களை சபையில் தெரிவித்தார். அவருக்கு இன்னும் கொஞ்சம் நேரம் கூடுதலாக அளித்திருந்தால் அவர் மூலம் இந்தியா குறித்த இன்னும் நிறைய தகவல்களை சபையோர் பெற்றிருக்கமுடியும்.
சேனன் தனது உரையில் இலங்கையில் சாதீயம் குறித்தும் அது இந்தியாவில் இருந்து எப்படி மாறுபட்டிருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டினார். அதுமட்டுமல்ல இங்கிலாந்திலும்கூட அரசு உயர்சாதியினருக்கு சாதகமாகவே நடந்து கொள்கிறது என்பதையும் விளக்கினார்.
அமெரிக்க இந்தியவம்சாவழி கவுன்சிலர் கஸ்மா சவான்ற் அவர்களும் சமுகம் அளித்து தனது கருத்தகளை பதிவு செய்தார். அவர் அமெரிக்காவில் சாதீயம் குறித்து தனது அனுபவங்களை வெளிப்படுத்தினார்.
இறுதியாக சபையோரின் வினாக்களுக்கு சேனனும் மீனா கந்தசாமியும் பதில் அளித்தார்கள். தொடர்ந்தும் இதுபோன்ற உரையாடல்கள் நடக்கும் என்றும் சாதீயத்திற்கு எதிராக சோசலிஸ்டுகள் முன்னெடுக்கும் போராட்டத்தில் அனைவரும் பங்கெடுக்க வேண்டும் என்றும் சேனன் கேட்டுக்கொண்டார்.
இரண்டு மணி நேரத்தில் சாதீயம் குறித்து முழுமையாக உரையாட முடியாது என்பது உண்மைதான். இருப்பினும் ஆசியர்களை கடந்து ஜரோப்பியர்களுக்கும் இந்த சாதீய உரையாடலை கொண்டு சென்றதன் மூலம் இது ஒரு வரவேற்கப்பட வேண்டிய நிகழ்வு என்பதில் சந்தேகம் இல்லை.
நிகழ்வு ஒருங்கமைப்பாளர்களுக்கு எமது பாராட்டுகள்.

No comments:

Post a Comment