Monday, August 31, 2015

• 1000கோடி ருபா செலவில் நடக்கும் தேர்தல் திருவிழா!

• 1000கோடி ருபா செலவில் நடக்கும் தேர்தல் திருவிழா!
அடக்குமுறையான முதலாளித்துவ அரசு இயந்திரத்தை வன்முறையால் உடைத்தெறியாமல் மக்களின் எந்த அடிப்படை பிரச்சனையையும் தீர்க்க முடியாது - தோழர் சண்முகதாசன்.
225 எம்.பி பதவிகளுக்கு 6124 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பதவியை பிடிப்பதற்காக ஒவ்வொரு வேட்பாளரும் சராசரி 10 லட்சம் ரூபாவுக்கு மேல் செலவு செய்கின்றனர். எனவே மொத்தம் 600 கோடி ருபாவுக்கு மேல் செலவாகிறது.
தேர்தலை நடத்த அரசு 400 கோடி ருபாவுக்கு மேல் செலவு செய்கிறது. ஆக மொத்தம் ஒரு தேர்தலில் 1000 கோடி ருபாவுக்கு அதிகமாக பணம் விரயமாகிறது.
தெரிவு செய்யப்படும் எம்.பி யின் சம்பளம் மாதம் 1லட்சத்து 20 ஆயிரம் ரூபா. அவர் தான் செலவு செய்த 10 லட்சம் ரூபா பணத்தை ஒரு வருடத்திற்குள் சம்பாதித்துவிடுவார். அதன் பின் நாலு வருட சம்பளம் மற்றும் பென்சன் , வாகன பெர்மிட் மூலம் ஒரு கோடி ரூபா எல்லாம் மேலதிக வருமானம் ஆகும்.
அரசியலில் இவ்வாறு இலகுவாக பல கோடி ருபா சம்பாதிக்க முடியும் என்பதால்தான்; எல்லொரும் தேர்தலில் போட்டியிடுகின்றனர். எம்.பி பதவி பெறுவதற்கு அலைகின்றனர்.
இவ் அரசியல்வாதிகள் தாம் பதவி பெறுவதற்காக மக்களை ஏமாற்றுகின்றனர். போலி வாக்குறுதிகளை வழங்குகின்றனர். மக்களுக்கு சேவை செய்யவே தாம் தேர்தலில் போட்டியிடுவதாக நாடகம் ஆடுகின்றனர்.
இந்த நாடகத்தை இவர்கள் இந்த முறை மட்டும் போடவில்லை. மாறாக 1948 முதல் பல வருடங்களாக போட்டு வருகின்றனர். ஆனால் மக்கள் இதனை உணர்ந்து கொள்ளாது தொடர்ந்தும் ஏமாறி வருகின்றனர்.
"வர்க்கப் போராட்டத்தின் ஒரு சிக்கல்கூட வன்முறையின்றி தீர்க்கப்பட்டதாக வரலாறு இல்லை" என்று ஆசான் தோழர் லெனின் கூறுகிறார். ஆனால் தேர்தல் மூலம் தமிழ் மக்களின் பிரச்சனை தீர்ப்போம் என தமிழ் அரசியல்வாதிகள் ஏமாற்றுகின்றனர்.
புலிகள் தமது ஆயுதங்களையே மௌனித்தார்களேயொழிய ஆயதப் போராட்டத்தை மௌனிக்கவில்லை.
புலிகள் தமது ஆயுதங்களை மௌனித்தது ஆயுதப் போராட்டம் தோல்வியடைந்து விட்டது என்று அர்த்தம் அல்ல.
ஆயுதப் போராட்டம் இன்னும் வெற்றி பெறாமல் இருக்கலாம். ஆனால் அதன் அர்த்தம் தோல்வி என்று அல்ல. ஏனெனில் விடுதலைப் போராட்டத்திற்கு தோல்வி என்பதே இல்லை.
தேர்தல்பாதை, அகிம்சை பாதை எல்லாம் பயனற்ற நிலையிலேயே தமிழ் இளைஞர்கள் ஆயதம் ஏந்தினார்கள்.
தமிழ் இளைஞர்கள் என்ன காரணத்திற்காக ஆயதம் ஏந்தினார்களோ அதில் ஒன்றுகூட இதுவரை தீர்க்கப்படவில்லை.
எனவே தமிழ்மக்கள் தொடர்ந்தும் ஆயுதம் ஏந்திப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.

No comments:

Post a Comment