Monday, August 31, 2015

எட்டாப் பழம் நரிகளுக்கு எப்போதும் புளிக்கும்!

 எட்டாப் பழம் நரிகளுக்கு எப்போதும் புளிக்கும்!
கருணா அம்மான் புதியதலைமுறை டிவிக்கு பேட்டியளித்துள்ளார். அதில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஒரு இனவாதக் கட்சி என்றும் அது தமிழர்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.
ஆனால் இதே கருணா அம்மான் கடந்த வருடம் "சிறீலங்கா சுதந்திரக்கட்சியில் தமிழர்கள் எல்லோரும் சேரவேண்டும். அதைவிட்டால் தமிழர்களுக்கு வேறு வழியில்லை" என்று கூறியிருந்தார்.
தான் அமைச்சராக இருந்தபோது சிறந்த கட்சியாக தோன்றிய சிறிலங்கா சுதந்திரக்கட்சி தற்போது எந்த பதவியும் அவருக்கு தராதபோது இனவாதக் கட்சியாக தெரிவது எட்டாப் பழம் நரிகளுக்கு எப்போதும் புளிக்கும் என்பதையே காட்டுகிறது.
ஆனால் இங்கு நாம் சுட்டிக்காட்ட விரும்புவது என்னவெனில் அவர் தனது பேட்டியில் இறுதி யுத்தத்தின்போது இந்திய ராணுவம் நேரடியாக யுத்த முனையில் பங்கு பற்றியது என்றும் தமிழர்களின் அழிப்பில் இந்திய அரசுக்கும் பங்கு உண்டு என்றும் தெரிவித்துள்ளார்.
கருணா அம்மான் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் உப தலைவராக இருந்தவர். இலங்கை அரசில் பிரதி அமைச்சராக இருந்தவர். நேரடியாக யுத்த முனைக்கு சென்றவர். எனவே அவரது கூற்று புறந்தள்ளிவிட முடியாதது.
இந்திய அரசு தமிழர்களுக்கு உதவும் என இன்னமும் கூறிக்கொண்டு திரிபவர்கள் இது குறித்து என்ன சொல்லப்போகிறார்கள்?
கருணா அம்மானின் பேட்டி குறித்து கருத்து தெரிவித்த தமிழக பிரமுகர்கள் அனைவரும் இந்த விடயத்தை தவிர்த்தது தற்செயலானதா? அல்லது இந்திய அரசுமீதான விசுவாசமா?

No comments:

Post a Comment