Monday, August 31, 2015

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டால் மகிழ்ச்சி விடுதலை செய்யப்படாவிடின் பெரு மகிழ்ச்சி!

• பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டால் மகிழ்ச்சி
விடுதலை செய்யப்படாவிடின் பெரு மகிழ்ச்சி!
இந்திராகாந்தியை கொன்றவரை தியாகி என சீக்கிய மதபீடம் அறிவித்துள்ளது. இந்திய அரசு சீக்கிய மதத்தை தடை செய்யவுமில்லை. அதன் தலைவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைக்கவுமில்லை.
மாறாக சீக்கிய மக்களிடம் மன்னிப்பு கோரியதுடன் சீக்கிய இனத்தவருக்கு பிரதமர் பதவியும் வழங்கியுள்ளது.
ஆனால், இது என்ன நியாயம்? எனக்கேட்ட தமிழர்கள் "புலிகள் ஆதரவாளர்கள்" என்று சிறையில் அடைக்கப்படுகிறார்கள். அகதிகள் சிறப்புமுகாமில் அடைக்கப்படுகிறார்கள்.
பேரறிவாளன் வாக்குமூலத்தை தான் திருத்தி எழுதினேன் என்று விசாரணை அதிகாரி கூறிய பின்பும்கூட அவரை விடுதலை செய்ய இந்திய அரசு மறுக்கிறது.
காங்கிரசும,; பி.ஜே.பி அரசும் இழைத்த துரோகங்களினால் இந்திய அரசு மீது தமிழ் மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள்.
உச்ச நீதிமன்றமும் பேரறிவாளனுக்குரிய நீதியை வழங்க மறுத்தால் தமிழ் மக்கள் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கையையும் இழப்பார்கள்.
இந்திய அரசு மீதும், இந்திய நீதிமன்றத்தின் மீதும் மக்கள் நம்பிக்கை இழப்பார்களேயானால் அது தமிழ்நாடு தனிநாடாகுவதற்கு வழி வகுக்கும்.
எனவே தமிழ்நாடு விடுதலைக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பு வழி வகுக்குமாயின் அது பெரு மகிழ்வுக்குரியதே!

No comments:

Post a Comment