Monday, January 30, 2023

வரிகள் அற்ற அரசு சாத்தியமா?

•வரிகள் அற்ற அரசு சாத்தியமா? அரசு இருக்கும்வரை வரியும் இருக்கும். எனவே வரிகள் அற்ற அரசு சாத்தியம் இல்லை என்று கூறுகின்றனர். சரி. அப்படியென்றால் அரசு அற்ற ஒரு சமூகம் குறித்து சிந்தித்தால் என்ன என்று கேட்டால் அதை ஏதோ பையித்தியக்கார சிந்தனைபோல் பார்க்கின்றனர். ஆனால் காரல் மாக்ஸ் கம்யுனிச சமூகத்தில் அரசு வாடி உதிர்ந்துவிடும் என்று கூறியிருக்கிறார். எனவே அரசு அற்ற ஒரு சமூகத்தை நாம் இப்போது சிந்திக்க முடியாது என்றாலும் குறைந்த பட்சம் வரிகள் குறைவான ஒரு அரசையாவது சிந்திக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். இன்று உலகில் அதிகளவு வரி அறவிடும் நாடுகளாக பெரும்பாலும் ஜரோப்பிய நாடுகள் இருக்கின்றன. உதாரணமாக பிரிட்டனில் அறவிடப்படும் வரிகளாக இவைகள் இருக்கின்றன. List of UK Taxes • INCOME TAX • CORPORATION TAX • VALUE ADDED TAX • NATIONAL INSURANCE CONTRIBUTIONS • CAPITAL GAINS TAX • INHERITANCE TAX • BUSINESS RATES • COUNCIL TAX • STAMP DUTY • ALCOHOL DUTY • HYDROCARBON OILS DUTY • TOBACCO DUTY • CUSTOMS DUTY • PETROLEUM REVENUE TAX • MOTOR VEHICLE DUTY • AIR PASSENGER DUTY • INSURANCE PREMIUM TAX • LANDFILL TAX • OIL ROYALTY • AGRICULTURAL LEVY • CLIMATE CHANGE LEVY • AGGREGATES LEVY இவ்வாறு பல்வேறு வடிவங்களில் சுமார் 32% வரியாக மக்களிடமிருந்து அறவிடப்படுகிறது . அதாவது ஒருவர் 100 ரூபா உழைத்தால் அவரிடமிருந்து அண்ணளவாக 32ரூபாவை வரியாக அரசு பறித்துக் கொள்கிறது என்கிறார்கள். இந்தளவு வரியை அறவிடும் அரசானது இதில் எந்தளனவு பணத்தை மக்களுக்கு செலவு செய்கிறது என்பது பற்றிய விபரங்கள் மக்களுக்கு தெரியப்படுத்துவதில்லை. உதாரணமாக அரசானது 100 ரூபாவை மக்களுக்கு ஒதுக்கினால் இது மக்களை சென்றடைய அரசுக்கு 65 ரூபா செலவாகிறது என்கிறார்கள். எனவேதான் இந்த மலை விழுங்கி மகாதேவனாகிய அரசை இல்லாமற் செய்ய வேண்டியது பற்றி சிந்திக்க வேண்டியவர்களாக நாம் இருக்கிறோம். மக்களுக்கு அபிவிருத்தி செய்ய பணம் இல்லை என்று அரசு கூறுகிறது. மக்களுக்கு வழங்கி வந்த உதவிகளை படிப்படியாக குறைத்து வருகின்றது. ஆனால் அதேவேளை மக்களின் வரிப் பணத்தில் மகாராணியின் குடும்பத்தை அரசு பேணி வருகின்றது. எனவேதான் இனி தான் மக்களின் வரிப் பணத்தில் வாழப்போவதில்லை என்று இளவரசர் ஹரி அறிவித்திருப்பது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

No comments:

Post a Comment