Saturday, April 29, 2023

விடுதலை படம் வெளிவந்தபின் ச

விடுதலை படம் வெளிவந்தபின் சமூக வலைத் தளங்களில் ஒரு பெரிய தேடலை உருவாக்கியுள்ளது என்றே எண்ணத்தோன்றுகிறது. அந்த படத்தில் காட்டப்பட்ட பொலிஸ் அராஜகத்தை புரிந்த தேவாரத்திடமே ஒரு பேட்டி கண்டு வெளியிட்டுள்ளனர்.( அப் பேட்டி கீழே கொமன்றில் தந்துள்ளேன்) ஒன்றல்ல இரண்டல்ல அறுபது எழுபது பேரை கொன்றோம் என சர்வ சாதாரணமாக கூறுகின்றார் முன்னாள் காவல்துறை அதிகாரி தேவாரம். வேலூர் கோட்டையில் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்ட ஈழ அகதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரியபோது அவர்களில் இருவரை சுட்டுக் கொன்றுவிட்டு பிரியாணி கேட்டு கலகம் செய்தார்கள் என் கூறியவர்தான் இந்த தேவாரம். அன்று மட்டுமல்ல இன்றும்கூட அக் கொலைகளுக்காக அவர் துளிகூட வருந்தவில்லை என்பது அவரது பேட்டியில் தெரிய வருகிறது. கொலைகளை ஒத்துக்கொண்ட தேவாரம் ஒரு பெண்கூட பாலியல் வல்லுறவு செய்யப்படவில்லை என மறுக்கிறார். ஆனால் உண்மை என்னவெனில் இவர்மீதுதான் அதிக பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இவரது அராஜகம் குறித்து எந்த அரசுகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக பாராட்டி பதக்கம் கொடுத்து வந்துள்ளன. மாட்டுக்கும் யானைக்கும் குரல் எழுப்பும் மனிதவுரிமை அமைப்புகள்கூட இந்த அறுபது எழுபது பேர் கொலைக்கு தேவாரத்திற்கு எதிராக குரல் எழுப்பவில்லை. ஆனால் தோழர் தமிழரசன் இக் கொலைகளுக்காக தேவாரத்தை தண்டிக்க வேண்டும் என விரும்பினார். விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு பெண் வீட்டிற்கு தேவாரம் வந்து செல்வதை அறிந்த தோழர் தமிழரசன் அங்கு வந்து காத்து நின்றார். இரண்டு தடவை வந்து காத்து நின்றார். ஆனால் அந்த இரண்டு முறையும் தேவாரம் வரவில்லை. தோழர் தமிழரசன் உயிருடன் இருந்திருந்தால் நிச்சயம் தேவாரம் தண்டிக்கப்பட்டிருப்பார். இது அராஜகம் புரியும் காவல்துறை அதிகாரிகளுக்கு ஒரு பாடமாக இருந்திருக்கும்.

No comments:

Post a Comment