Saturday, April 29, 2023

விடுதலை படம் வெளிவந்த பின்பு

விடுதலை படம் வெளிவந்த பின்பு புலவர் மற்றும் தமிழரசன் பற்றிய தேடல் தமிழ் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதனால் அவர்களுடன் தொடர்புகொண்ட இரு ஈழத் தமிழர்கள் பற்றி இங்கு பதிவிட விரும்புகிறேன். ஒருவர் தோழர் நெப்போலியன். இவர் யாழ்ப்பாணத்தில் கரவெட்டியில் பிறந்தவர். இவர் 1983ல் பெண்ணாடத்தில் புலவர் மற்றும் தமிழரசன் நடத்திய மாநாட்டில் பங்குபற்றியிருந்தார். அதன்பின்பு மதுரை அருகில் வாடிப்பட்டியில் தமிழரசன் மற்றும் அவரது தோழர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கினார். அதனால் இந்திய உளவுப்படைகளின் உத்தரவுக்கிணங்க 1986ல் மலையகத்தில் வைத்துக் கொல்லப்பட்டார். இன்னொருவர் தோழர் ராயு. இவர் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்தவர். இவர்தான் தமிழரசன் மேற்கொண்ட அரியலூர் மருதையாற்றுப்பால வெடி குண்டிற்கு கூட இருந்து உதவியவர். இவரையும் பொன்பரப்பி சம்பவத்தில் தமிழரசனுடன் சேர்த்துக் கொல்வதற்கு உளவுப்படை திட்டமிட்டிருந்தது. ஆனால் சயிக்கிளில் செல்வதால் தேவையில்லை எனக்கூறி தமிழரசன் இவரை அழைத்துச் செல்லவில்லை. அதனால் உயிர் தப்பினார். இவர் 10.07.2012 யன்று மட்டக்களப்பில் காலமானார். வரலாற்றில் தோழர் தமிழரசன் பெயர் உச்சரிக்கப்படும்போதெல்லாம் அவருக்கும் அவர் மேற்கொண்ட தமிழ்நாடு விடுதலைக்கும் உதவிய இந்த இரு ஈழத்தமிழர்களும் கூடவே நினைவு கூரப்பட வேண்டும்.

No comments:

Post a Comment