Tuesday, September 10, 2013

ஈராக் ,சிரியாவுக்கு ஒரு நீதி! இலங்கைக்கு இன்னொரு நீதி! இதுதான் மேற்குலகின் மனிதாபிமான நீதியா?

சிரியாவில் ரசாயண குண்டு பாவித்தமைக்காக சிரிய அரசை தண்டிக்கும்பொருட்டு போர் தொடுப்போம்- அமெரிக்க ஜனாதிபதி ஓபாமா

• ரசாயண குண்டுகள் பாவிக்கப்படக்கூடாது என 100 வருடங்களுக்கு முன்னரே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதனை மீறியமைக்காக சிரியா மீது போர் தொடுக்க எல்லா நியாயங்களும் பிரிட்டனுக்கு உண்டு.- பிரிட்டன் பிரதமர் டேவிட் கமருன்

ஒபாமா மற்றும் கமருன் அவர்களே!

அன்று சதாம் உசேன் ரசாயண குண்டு வைத்திருப்பதாக கூறி ஈராக் மீது போர் தொடுத்தீர்கள். ஆனால் அங்கு ஒரு ரசாயண குண்டையும் இன்னும் கண்டு பிடிக்கவில்லை.

இன்று சிரியா ரசாயண குண்டு போட்டதாக கூறுகிறீர்கள். ஆனால் அதற்கு எந்த ஆதாரமும் இன்னும் வைக்கவில்லை.

இலங்கையில் பல தமிழர்கள் ரசாயண குண்டால் கொல்லப்பட்டபோது ஏன் நீங்கள் கண்டிக்கவில்லை? இலங்கை மீது ஏன் போர் தொடுக்கவில்லை? மாறாக இலங்கையில் நடக்க இருக்கும் மாநாட்டுக்கு எந்த முகத்தோடு செல்ல விருக்கிறீர்கள்? இலங்கை தமிழர்கள் மனிதர்கள் இல்லை என்பதாலா? அல்லது இலங்கையில் பெற்றோல் கிணறு இல்லை என்பதாலா?

ஈராக் ,சிரியாவுக்கு ஒரு நீதி! இலங்கைக்கு இன்னொரு நீதி!
இதுதான் மேற்குலகின் மனிதாபிமான நீதியா?

இதோ கீழே உள்ள படத்தில் ரசாயண குண்டால் கொல்லப்பட்ட தமிழர்களின் உடல்கள் ஆதாரமாக உள்ளது. ஆனால் இவை ஏன் அமெரிக்க பிரிட்டன் தலைவர்களின் கண்களுக்கு தெரிவதில்லை?

No comments:

Post a Comment