Tuesday, September 10, 2013

தோழர் தமிழரசனுக்கு ஒரு நினைவுச் சின்னம் எழுப்பி அவரது தாயாரின் ஆசையை யாராவது நிறைவேற்றுவார்களா?

• தோழர் தமிழரசனுக்கு ஒரு நினைவுச் சின்னம் எழுப்பி அவரது தாயாரின் ஆசையை யாராவது நிறைவேற்றுவார்களா?

தோழர் தமிழரசனைப் பெற்றnடுத்த தாய். மிகவும் வறிய நிலையிலும் தன் மகனை பொறியல்துறையில் படிக்க வைத்தார். தான் பெற்று வளர்த்த மகன் தன்னைப் பார்க்கவில்லை என்றாலும் தமிழ்நாட்டு விடுதலைக்காக அவர் போராடியது குறித்து அவர் என்றுமே மகனிடம் கடிந்து கொண்டதில்லை. தன் மகனுக்கு ஒரு நினைவுச் சின்னம் எழுப்ப வேண்டும் என்பது அவரது ஆசையாக உள்ளது. அதற்காக தனது நிலத்தில் ஒரு பகுதியையும் ஒதுக்கி வைத்திருக்கிறார் என்று அறிந்தேன். அவரது ஆசையை நிறைவேற்ற புலவர் கலியபெருமாள் முயற்சி செய்தார். ஆனால் அதற்குள் அவர் மரணமடைந்துவிட்டார். பின்பு தோழர் பொழிலன் முயற்சி செய்தார். அவரும் அதனை நிறைவேற்றுவதற்கள் சிறை செல்ல வேண்டியதாயிற்று. தோழர் முகிலன் தான் முயற்சி செய்யப்போவதாக 4றினார். அவராலும் இன்னும் முடியவில்லை. அய்யா நெடுமாறன் , சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் போன்றோர் தோழர் தமிழரசன் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவர்கள். அவர்கள் முயற்சி செய்தால் இந்த தாயின் ஆசையை நிறைவேற்ற முடியும். செய்வார்களா?

No comments:

Post a Comment