Tuesday, September 10, 2013

• லண்டனில் விநாயக சதுர்த்தி

• லண்டனில் விநாயக சதுர்த்தி

லண்டனில் பிள்ளையாருக்கு அரோகரா!

பிள்ளையாரை விற்பனை செய்யும் கடைக்காரருக்கு அரோகரா!

பிள்ளையாரை வாங்கி வீட்டு பாத்ரூமில் கரைக்கும் அப்பாவி தமிழருக்கு அரோகரா!

லண்டனில் குட்டி யாழ்ப்பாணம் என்று அழைக்கப்படும் ஈஸட்காம் நகரில் என்றுமில்லாதவாறு இம் முறை விநாயக சதுர்த்தி களைகட்டியுள்ளது. பக்தர்களால் நிரம்பி வழிகிறது. இம்முறை கடவுள் பிள்ளையார் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு மலிவு விலையில் விற்பனை செய்யப்படுகிறார். கடைவியாபாரிகள் பிள்ளiயாரை விற்று நல்லாய் காசு சம்பாதிக்கிறார்கள்.

இந்தப் பிள்ளையாரை எங்கு கரைப்பார்கள் என்று கடைக்காரரிடம் கேட்டேன். “வீட்டில்தான் கரைப்பார்கள்” என்று சர்வசாரதாரணமாக சொல்லிவிட்டு அவர் வியாபாரத்தை மும்முரமாக கவனித்தார். லண்டனில் தேம்ஸ் நதி ஓடுகிறது. அதில் இந்தியாபோல் சும்மா எல்லாம் போய் கரைக்க முடியாது. கவுன்சில் அனுமதி எல்லாம் வாங்க வேண்டும். அது இலகுவில் கிடைக்காது. எனவே வீட்டில்தான் பிள்ளiயாரை கரைக்க வேண்டும். வேறு வழியில்லை. பெரும்பாலான வீட்டில் கக்கூசும் குளியல் தொட்டியும் ஒரு அறையில்தான் இருக்கிறது. அப்படி என்றால் கக்கூஸ் அறையில் கடவுளைக் கரைக்கிறார்களா? பிள்ளiயார் இதை பொறுத்துக் கொள்வாரா? அது சரி, கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்றால் கக்கூஸ் தொட்டியில் இருக்கமாட்டாரா என்ன?

இந்த அப்பாவி பக்தர்கள் எங்கு வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் கரைத்தவிட்டு போகட்டும். அது அவர்களது முட்டாள்தனம். ஆனால் அவர்கள் கூறவது போல் இந்த பிள்ளiயார் யார்? அவரை கரைத்தால் பலன் கிடைக்குமா? என்பது பற்றி கொஞ்சம் பார்ப்போம்.

தமிழரின் (இந்து) சைவ மதத்தில் விநாயகரே கிடையாது. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தளகர்த்தன் என்ற பார்ப்பனன் தான் முதன் முதலில் பிள்ளையார் வழிபாட்டை, வாதாபியிலிருந்து இறக்குமதி செய்து தமிழர்கள் தமிழ் நாட்டில் புகுத்தினான். இந்தப் பிள்ளையார் பிறப்புக்கு பல கதைகள் உண்டு.

விநாயகன், விக்னேசுவரன், கணபதி, கணேசன் என்றெல்லாம் சொல்லப்படும் பிள்ளையாரின் பிறந்தநாள் பிள்ளையார் சதுர்த்தி ஆகும். எப்படி இந்த பிறந்த நாளைக் கண்டறிந்தார்கள் என்பதே விளங்கவில்லை (யாரும் கேள்வி கேட்கவும் கூடாது).
முதலில் பிள்ளையார் எப்படி பிறந்தார் என்பதை அவர்கள் சொல்வதை வைத்தே காண்போம் !

சிவ மகாபுராணத்தில் கூறப்பட்ட கதைச் சுருக்கம் இது:

பார்வதியுடன் (சிவனின் மனைவி) பேசிக் கொண்டிருந்த அவள் தோழி விஜயை என்பவள் உங்கள் கணவருக்கு மட்டும் ஏராளமான வேலைக்காரர்கள் (கணங்கள்) இருக்கும்போது - உங்களுக்கு யாருமே இல்லையே என்று கேட்டாளாம் ! அவள் தன் உடலிலிருந்து அழுக்கைத் திரட்டி எடுத்து மூன்று கண்களும் உடைய உருவத்தை உண்டாக்கிக் காவலுக்கு வைத்துவிட்டுக் குளிக்கப் போனாராம்.

பார்வதி குளிப்பதை பார்த்து காமமுற்ற வந்த சிவன் உள்ளே போக முயல, அழுக்கு உண்ண்டைக் கணபதி தடுத்ததாம். நான்தான் சிவன் எனக் கூறிக் கொண்டே உள்ளே போக முயல, கோவம் கொண்ட அழுக்கு உருண்டை தன் தண்டாயுதத்தால் சிவனை அடித்துவிட்டது. பதிலுக்கு சிவன் அடியாட்களை அனுப்ப அவர்களையும் அடித்து விரட்டிவிட்டது. சிவனுக்கு ஈகோ கிளம்பி, சூலாயுதத்தால் அழுக்குருண்டையின் (பிள்ளையாரின்) தலையை வெட்டிவிட்டார். இதை கண்டு பார்வதி அழுதுபுரளவே, வடக்கே தலை வைத்து படுத்திருந்த ஒரு கொம்பு உள்ள யானைக் குட்டியின் தலையைவெட்டி வந்து வந்து பிள்ளையாரின் உடலோடு ஒட்டியவுடன் அந்த உடலுக்கு உயிர் வந்து விட்டது. அவர்தான் இந்தப் பிள்ளையார் என்கிறது சிவபுராணம்.

ஒருகட்டத்தில் தன் தாயின் (பார்வதி) அழகில் மயங்கி அவரையே மனைவியாகக் கேட்டாராம் பிள்ளையார். இதனால் இவருக்கு பெண்கிடைக்க வில்லையாம். இவரின் இந்த விநாயகன் பிரம்மச்சாரி என்று ஒரு கதை. சித்தி, புத்தி என்று இரு மனைவிகள் உண்டு என்று இன்னொரு கதை. எதை நம்புவது? பிறப்பு -இறப்பு இல்லாதவன் கடவுள் என்று சொல்லுவார்கள். ஆனால் பிள்ளையாருக்கு ?

உண்மையிலே இப்படி ஒரு கடவுள் இருந்தது என்றால், ஏன் இப்படி முரண்பாடான கதைகளைச் சொல்கின்றன புராணங்கள்? உண்மையில் ஏழை எளிய மக்களை பக்தி என்னும் பெயரில் புராண புரட்டுகளை இட்டு கட்டி காசுபார்க்க பார்ப்பனர்கள் திரித்த கட்டுக் கதையே பிள்ளையார்.

இந்தப் பிள்ளையாரின் பெயரால் களிமண் சிலை செய்து தெருவுக்கு தெரு பிரமாண்ட சிலைவைத்து , அபிஷேகம் என்னும் பெயரில் பால், நெய் போன்றவற்றை குடம் குடமாக ஊற்றி படையலிட்டு மூன்றாம் நாள் தூக்கிப் போய் கடலிலே உடைத்து வீசுவதற்கு ஒரு விழா..

ஆபாசம், திருட்டு, கொலை, ஏமாற்று போன்றவை நிரம்பி வழியும் புராணக் கதைகளை நம்பி புத்தியை இழப்பது அறியாமை செயல்தானே! இது போன்ற புரட்டுகளின் பின்னால் கோஷம் போட்டு குதிப்பது அறிவுடையவர்கள் ஏற்கக் கூடிய செயல் தானா !

மனிதனின் அறிவு , ஆற்றல், நேரம் அனைத்தும் நம்முடைய சமுதாய வளர்ச்சிக்காகவே செலவிடப்பட வேண்டும். மக்களின் மனக்கஷ்டத்தையும், அறியாமையையும் பயன்படுத்திக் கொண்டு மத வெறியை கிளப்பி பணம், பொருள், நேரம், சுற்றுச் சூழல் ஆகியவற்றை விரையமாக்கி கொண்டாடப்படும் போலி விழாக்களை புறக்கணிப்போம்!

No comments:

Post a Comment