Sunday, September 30, 2018

இம்முறையாவது கைதிகள் விடுதலை செய்யப்படுவார்களா?

•இம்முறையாவது கைதிகள் விடுதலை செய்யப்படுவார்களா?
அல்லது வழக்கம்போல இம்முறையும் ஏமாற்றப்படுவார்களா?
தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதம் 12வது நாளாக தொடர்கிறது.
இதில் இருவர் உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
எமது தலைவர்கள் வழக்கம்போல் சம்பிரதாய ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு ஓய்ந்துவிட்டனர்.
“ஜனாதிபதி உறுதிமொழி தந்துள்ளார்” என வழக்கம்போல் சம்பந்தர் அய்யா அறிக்கை விட்டுவிட்டார்.
அரசியல் கைதிகள் ஒவ்வொரு முறையும் உண்ணாவிரதம் இருக்கும்போதும் இதுதான் நடக்கிறது.
ஆனால் இதுவரை அரசியல்கைதிகள் யாரும் விடுதலை செய்யப்படவில்லை. இதுகுறித்து யாருமே அக்கறையும் கொள்வதில்லை.
இதில் வேதனையான விடயம் என்னவென்றால் இவ் அரசியல் கைதிகள் தம்மை விடுதலை செய்யுமாறு கோரி உண்ணாவிரதம் இருக்கவில்லை.
மாறாக தமது வழக்குகளை விரைந்து விசாரணை செய்யுமாறு கோரியே உண்ணாவிரதம் இருக்கின்றனர்.
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பாகும் என்கிறார்கள். இங்கு அரசியல் கைதிகளுக்கு நீதி மறுக்கப்படுகிறது.
இங்கு எழும் கேள்வி என்னவெனில் தமக்கு சொகுசுவாகனம், சொகுசு பங்களாக்கள் கேட்டு வாங்கிய எமது தலைவர்களால் இந்த அரசியல் கைதிகளுக்கு நீதி பெற்றுக் கொடுக்க முடியாதா?

No comments:

Post a Comment