Sunday, September 30, 2018

யாரிடம் போய் சொல்லி அழுவது?

•யாரிடம் போய் சொல்லி அழுவது?
தமிழ் இனத்தை கடவுளாலும் காப்பாற்ற முடியாது!
கிளிநொச்சியில் ஒரு மாணவி பள்ளி சீருடை வாங்க பணம் இன்றி தற்கொலை செய்துள்ளார்.
ஒரு பொறுப்புள்ள கல்வி அமைச்சர் இதற்கு என்ன செய்திருக்க வேண்டும்?
எமது மான்புமிகு கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் உடனடியாக சென்றார். நடவடிக்கை எடுத்தார்
“ஓ! அப்படியா? ஆச்சரியமாக இருக்கிறதே!” என்று மனதிற்குள் நினைக்கிறீர்களா?
ஆம். அவர் அந்த ஏழை மாணவியின் வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறியிருப்பார் என நீங்கள் நினைக்ககூடும்.
இல்லை. அவர் அந்த ஏழை மாணவியின் வீட்டுக்குச் செல்லவும் இல்லை. ஒரு சம்பிரதாயத்திற்காகவது ஆறுதல் செய்தியும் தெரிவிக்கவில்லை.
அவர் அதைவிட முக்கியமான(?) ஒரு இடத்திற்கு சென்றார். ஆம். யாழ் இந்திய தூதர் நடத்திய “தெய்வீக சுகானுபவம்” நிகழ்வுக்கு சென்றார்.
சென்றவர் இந்திய தூதரின் சுகானுபவத்தை பெற்று திரும்பியிருக்கலாம். ஆனால் அவர் அங்கு ஒரு முக்கிய அறிவித்தல் செய்துள்ளார்.
இனி யாரும் பரதநாட்டியத்தை தெருவில் ஆடக் கூடாது என்று தன் அமைச்சு அதிகாரத்தை பயன்படுத்தி அறிவித்துள்ளார்.
எமது மாண்புமிகு கல்வி அமைச்சருக்கு சீருடை இன்றி மாணவி தற்கொலை செய்வது குறித்து அக்கறை இல்லை. மாறாக பரதநாட்டியம் தெருவில் ஆடுவது பற்றியே கவலை உள்ளது.
அது மட்டுமன்றி பரதநாட்டியத்தை வளர்த்தெடுப்பதற்காக நூலகம் ஒன்று வடமாகாணசபை மூலம் கட்டப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் பல பாடசாலைகள் கூரை வேய வசதியின்றி இருக்கின்றது. மாணவர்கள் மர நிழலில் இருந்து கல்வி கற்கிறார்கள்.
ஆனால் எமது கல்வி அமைச்சருக்கு அதையிட்டு கவலை இல்லை. அவரது அக்கறை எல்லாம் பரதநாட்டியத்திற்கு நூலகம் கட்ட வேண்டும் என்பதே.
இந்த அவலத்தை நாம் யாரிடம் சென்று சொல்லி அழுவது?
தமிழ் இனத்தை கடவுள்தான் இனி காப்பாற்ற வேண்டும் என்று தந்தை செல்வா கூறினாராம். ஆனால் இனி அந்த கடவுளாலும் காப்பாற்ற முடியாது!
கல்வி அமைச்சர் அவர்களே!
யாழ் இந்திய தூதர் தேர்தலில் சீட் கிடைக்க சிபாரிசு செய்யலாம். தேர்தலுக்கு செலவு செய்ய நிதியும் தரலாம். ஆனால் தேர்தலில் அவர் வாக்கு போட முடியாது. மக்கள்தான் போடவேண்டும். அதை நினைவில் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment