Sunday, September 30, 2018

•குவைத்தில் நடைபெற்ற தோழர் தமிழரசன் நினைவேந்தலும் நூல் அறிமுகமும்

•குவைத்தில் நடைபெற்ற தோழர் தமிழரசன்
நினைவேந்தலும் நூல் அறிமுகமும்
01.09.2018 யன்று குவைத்தில் ஜமிர்ஹாப்ஸ பகுதியில் தோழர் தமிழரசன் நினைவேந்தல் நிகழ்வும் நூல் அறிமுகமும் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வு அரங்கத்திற்கு தமிழ்தேசிய போராளி தோழர் சுந்தரம் (சு) நினைவரங்கம் என அடையாள படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியை குவைத் தமிழக இஸ்லாமிய மாணவர் பேரவை ஒருங்கிணைத்தார்கள்.
தலைமை - தோழர் தமிழ் நாடன், (அமைப்பாளர் - பொங்குதமிழ் மன்றம்).
முன்னிலை - தோழர் செல்லபெருமாள், (காப்பாளர் - தந்தை பெரியார் நூலகம்) .
வரவேற்புரை - தோழர் அமானுல்லா, (ஆசிரியர் - தமிழ்நேசன் வார இதழ்)
துவக்கவுரை - தமிழ்வேள் சத்தியன் (அமைப்பாளர் - மாதமிழ் மரபு பட்டறை)
கருத்துரை - தோழர் சித்தார்த் (திராவிடர் கழகம்)
சிறப்புரை - வல்லம் அப்பாஸ் (அமைப்பாளர் - FIDA )
நன்றியுரை - சத்திரமனை ஹஸன் முஹமது (துனை பொதுசெயளாளர் காயிதே மில்லத் பேரவை)
நிகழ்ச்சி தொகுப்பு - ரஹ்மத்துல்லா (நெறியாளன் - TISA)
நான் எழுதிய “ ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன்” நூலை குவைத்தில் அறிமுகம் செய்துவைத்த உணர்வாளர்களுக்கு நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகில் பற்றி எரிந்த பெரு நெருப்பெல்லாம் ஒரு சிறு பொறியில் இருந்தே ஆரம்பித்துள்ளது.
தமிழரசன் பற்ற வைத்த தீ பெரும் காட்டு தீயாக பரவட்டும்! புரட்சி மலரட்டும்.!!

No comments:

Post a Comment