Sunday, September 30, 2018

நாடு கடந்த தமிழீழ அரசா?

•நாடு கடந்த தமிழீழ அரசா? அல்லது
நட்டு கழண்ட தமிழீழ அரசா இது?
இத்தனை அழிவிற்கு பிறகும் இத்தனை அழிவிற்கு காரணமான இந்திய அரசை நம்பும் நாடுகடந்த தமிழீழ அரசை என்னவென்று அழைப்பது?
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான அமைச்சர் மாணிக்கவாசகரை “முட்டாள்” என்பதா அல்லது “அடி முட்டாள்” என்பதா?
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சில மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வந்திருந்தார். அப்போது காணாமல்போனோரின் உறவுகள் போராட்டம் நடத்திய இடத்தின் வழியே சென்றார்.
அப்போது அவ் உறவுகள் தமிழிசையை சந்திக்க விரும்பினார்கள். அவர்கள் வயதான தாய்மார்கள். அறவழியில் போராடி வருகிறார்கள்.
யாராக இருந்தாலும் சில நிமிடங்கள் அவர்களை சந்தித்து ஆறுதல் கூற விரும்புவார்கள். ஆனால் ஒரு பெண்ணாகிய தமிழிசையே அவர்களை சந்திக்க மறுத்துவிட்டார். பார்வையிடாமலே சென்று விட்டார்.
அப்படிப்பட்ட தமிழிசையையே இந்த நாடுகடந்த தமிழீழ அமைச்சர் சந்தித்து முள்ளிவாயக்கால் படுகொலை விசாரணைக்கு ஆதரவு கேட்டிருக்கிறார்.
இந்திய அரசு முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு உதவியதோடு அது பற்றிய விசாரணையையும் தடுத்து வருகிறது. இந்திய அரசே இலங்கை அரசை காப்பாற்றி வருகிறது.
அப்படிப்பட்ட இந்திய அரசிடம் சென்று ஆதரவு கேட்டிருக்கிறார் இந்த முட்டாள் அமைச்சர்.
போற போக்கைப் பார்த்தால் மகிந்த ராஜபக்சாவிடமும் சென்று ஆதரவு கேட்பார்கள் போல இருக்கு.
•தமிழகத்தில் 30 வருடங்களுக்கு மேலாகாக குடியுரிமை இன்றி ஈழ அகதிகள் கஸ்டப்படுகின்றனர்.
•தமிழகத்தில் சிறப்புமுகாம் என்னும் சித்திரவதைமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை.
•தகுதி இருந்தும் அகதி என்பதால் ஈழ அகதி மாணவர்களுக்கு தமிழகத்தில் உயர்கல்வி வாய்ப்பு மறுக்கப்படுகிறது.
•வேலை வாய்ப்பு மறுக்கப்டுகிறது. ஆட்டோ ஓட்டி பிழைக்க லைசென்ஸ் கூட எடுக்க முடியவில்லை.
•உல்லாசப் பயணிகளுக்கு கப்பல் சேவை வழங்க முன்வரும் இந்திய அரசு தாயகம் திரும்பும் அகதிகளுக்கு கப்பல் சேவை வழங்க மறுக்கிறது.
நாடுகடந்த தமிழீழ அமைச்சர் இப் பிரச்சனைகள் குறித்து தமிழக பாஜக தலைவர்களுடன் பேசியிருந்தால் சிலவேளை ஏதாவது பயன் கிடைத்திருக்கும்.
ஏன் அவர் இவை குறித்து பேசவில்லை?
குறிப்பு- “பாசிச பாஜக ஒழிக” என்று தமிழக தமிழர்கள் குரல் எழுப்புகிறார்கள். ஆனால் நாடுகடந்த தமிழீழ அமைச்சர் அந்த பாசிச பாஜகவிடம் சென்று ஆதரவு கேட்கிறார்.

No comments:

Post a Comment