Thursday, March 20, 2014

• மாலாவுக்கு ஒரு நீதி விபூசிகாவுக்கு இன்னொரு நீதி இதுதான் உலக நீதியா?

• மாலாவுக்கு ஒரு நீதி
விபூசிகாவுக்கு இன்னொரு நீதி
இதுதான் உலக நீதியா?

சிறுமி மாலாவுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்காக குரல் கொடுத்த உலக நாடுகள் இலங்கையில் சிறுமி விபூசிகாவுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்காக குரல் கொடுக்க மறுக்கின்றன. இது என்ன நியாயம்?

குழந்தை விபூசிகா இலங்கையில் பிறந்தது குற்றமா?
அல்லது அவர் தமிழ் மொழியில் பேசுவது குற்றமா?
அவர் தன் சகோதரன் எங்கே என்று கேட்டது குற்றமா?
மாலாவுக்கு குரல் கொடுத்த வல்லரசுகள்,
ஏன் விபூசிகாவுக்கு குரல் கொடுக்க மறுக்கின்றன?

• விபூசிகாவின் கொடுமைக்கு எதிராக குரல் கொடுக்க சென்ற மனித உரிமை ஆர்வலர்ககள் கைது செய்யப்படுகிறார்கள். அவர்களின் பெற்றேரும் கூட விசாரணக்கு அழைத்து மிரட்டுகிறது இலங்கை அரசு.

• சட்டவிரோதமாக தன்னைக் கண்கானிப்பதை இலங்கை அரசு நிறுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கேட்டுள்ளார். ஒரு முன்னாள் ஜனாதிபதிக்கே இந்த நிலை என்றால் சாதாரண குடிமக்களின் கதி என்ன?

• இராணுவத்தைக் கொண்டு சர்வாதிகார ஆட்சியை இலங்கை அரசு மேற்கொள்கிறது. ஆனால் அமெரிக்க அரசு இலங்கை அரசுக்கு நற்சான்றிதழ் வழங்கி ஆசீர்வதிக்கிறது. இந்திய அரசுவோ இலங்கை அரசைக் காப்பதையே தன் முழுநேர பணியாக செயற்படுகிறது.

இந்திய அரசோ அல்லது அமெரிக்க அரசு உட்பட எந்த வல்லரசுகளும் தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்கப் போவதில்லை. எனவே அவர்களை நம்புவது தற்கொலைக்கு ஒப்பாகும்.

உலக மக்களுக்கு சொல்வதன் மூலமும் சர்வதேச மக்களின் ஆதரவைப் பெறுவதன் மூலமே நாம் நியாயம் பெற முடியும். எனவே சிங்கள மக்கள் உட்பட அனைத்து மக்களுக்கும் எமது பிரச்சனைகளை கூறுவோம்.

மக்களுக்கு கூறுவோம்.
மக்கள் மட்டுமே நியாயம் வழங்கும் சக்தி படைத்தவர்கள்.
மக்களை அணி திரட்டுவோம்.
அநியாயத்திற்கு எதிராக ஒருமித்து போராடுவோம்!!

No comments:

Post a Comment