Saturday, March 1, 2014

பிரித்தானிய தமிழர் இலங்கை சிறையில் கொல்லப்பட்டாரா?

பிரித்தானிய தமிழர் இலங்கை சிறையில் கொல்லப்பட்டாரா?

• பிரித்தானிய அரசு அக்கறையின்றி இருப்பதற்கு நிறவேற்றுமை காரணமா?

• இலங்கையில் தொடரும் சிறைக் கொடுமைகளுக்கு முடிவு எப்போது?

இலங்கை சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பிரித்தானிய தமிழர் ஒருவர் இறந்துள்ளார். அவர் மாரடைப்பால் இறந்ததாக சிறைத்துறை நிர்வாகம் கூறுகிறது. ஆனால் அவர் கொல்லப்பட்டிருப்தாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

தனது பிரஜை ஒருவர் இலங்கை சிறையில் மரணம் அடைந்திருப்பது தொடர்பாக பிரித்தானிய அரசு எவ்வித அக்கறை இன்றியும் அலட்சியமாக இருந்து வருகிறது. இதற்கு நிறவேற்றுமைதான் காரணமோ என தோன்றுகிறது.

கடந்த வருடம் ஒரு வெள்ளை இன பிரித்தானியர் இலங்கையில் கொல்லப்பட்டபோது உடனடியாக பாராளுமன்ற உறுப்பினர் இலங்கை சென்று அக் கொலையில் சம்பந்தப்பட்டதாக சந்தேகப்பட்ட ஜனாதிபதி மகிந்தவின் நண்பரை கைது செய்ய வைத்தது பிரித்தானிய அரசு. ஆனால் இன்று ஒரு பிரித்தானிய பிரஜை இலங்கை சிறையில் கொல்லப்பட்ட பின்பும் அது குறித்து பிரித்தானிய அரசு அக்கறை இன்றி இருப்பது ஏன்? அவர் வெள்ளை இனத்தவர் அல்லர் என்பதாலா? அல்லது அவர் தமிழர் என்பதாலா?

பிரித்தானியாவில் நிறவேற்றுமை சட்டப்படி குற்றம். இருப்பினும் அனைத்து இடங்களிலும் நிறவேற்றுமை பார்க்கப்படுகிறது என்பதே உண்மை. மருத்துவமனை, வேலைத் தலங்கள், பொலிஸ் நிலையங்கள் என அனைத்து இடங்களிலும் வெள்ளையர்களை ஒருமாதிரியும் வெள்ளையர் அல்லாதோர்களை இன்னொரு மாதிரியும் நடத்தப்படுகின்றனர்.

இன்றும்கூட ஒரு கறுப்பு இன பெண் பொலிஸ் தான் நிற ரீதியாக நடத்தப்பட்டதாக வழக்கு தாக்கல் செய்துள்ளார். கடந்த வருடம் ஒரு பொலிஸ் உயர் அதிகாரியே தனக்கு நிறவேற்றுமை காரணமாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை என வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த வருடம் லண்டனில் நடந்த கலவரத்திற்கும்கூட நிறவேற்றுமையே காரணமாக இருந்திருக்கிறது. எனவேதான் பிரித்தானிய தமிழரின் கொலை விடயத்திலும் இதுவரை பிரித்தானிய அரசு அக்கறை இன்றி இருப்பதற்கு நிறவேற்றுமைதான் உண்மையான காரணமோ என்ற சந்தேகம் எழுகிறது.

No comments:

Post a Comment