Thursday, March 20, 2014

லண்டன் கோயில் உண்டியல் பணம் அய்யா நெடுமாறனுக்கு தரப்பட்டதா?

லண்டன் கோயில் உண்டியல் பணம் அய்யா நெடுமாறனுக்கு தரப்பட்டதா?

லண்டனில் உள்ள ரூட்டிங் அம்மன் கோயில் உண்டியல் பணத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் 500 பவுண்ட்ஸ் ( சுமார் 50ஆயிரம் இந்திய ரூபா) அய்யா நெடுமாறன் அவர்களுக்கு தரப்பட்டதாக “தேசம்நெட்” என்ற இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

கோயில் உண்டியல் பணம் மக்களுடையது. இந்த மக்கள் பணம் துஸ்பிரயோகம் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இதில் அய்யா நெடுமாறன் அவர்கள் பெயரும் இடம்பெற்றிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. இது குறித்து அய்யா நெடுமாறன் அவர்கள் உண்மையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

தமிழக அரசியல்வாதிகள் பலர் புலிகளிடம் பணம் பெற்றுவருவதாக இலங்கை அரசு குற்றம் சாட்டி வருகிறது. சில வருடங்களுக்கு முன்னர் கலைஞர் கருணாநிதியும் அய்யா நெடுமாறன் அவர்கள் புலிகளிடமிருந்து பணம் பெற்றுக்கொள்வதாக குற்றம்சாட்டினார்.

ஆனால் தற்போது கோயில் உண்டியல் பணத்தை மாதம் தோறும் அய்யா நெடுமாறனுக்கு அனுப்பிவந்த சதீஸ் அய்யா என்பவரே பத்திரிகைக்கு பேட்டி கொடுத்திருக்கின்றார். எனவே இது குறித்து அய்யா நெடுமாறன் அவர்கள் மக்களுக்கு உண்மையை விளக்க வேண்டும்.

அய்யா நெடுமாறன் அவர்கள் வசதியான குடும்பத்தில் இருந்து வந்தவர். அதுமட்டுமல்ல அவர் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் இருந்தவர். அவர் விரும்பியிருந்தால் அமைச்சராகி கோடிக்ணக்கில் பணம் சம்பாதித்திருக்க முடியும். எனவே அவர் பணத்திற்காக ஈழத் தமிழர்களை ஆதரித்தார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது. அதுவும் கோயில் உண்டியல் பணத்தை அவர் பெற்றிருப்பார் என்பதை நம்ப முடியாமல் இருக்கிறது. எனவே இது குறித்து அவரின் நல்ல பதிலை எதிர்பார்த்து இருக்கின்றோம்.

“தேசம்நெட்டில்” வெளியான கட்டுரையை படிக்க விரும்புவோர் கீழ்வரும் இணைப்பில் பார்க்கலாம்.

http://thesamnet.co.uk/?p=51674

No comments:

Post a Comment