Thursday, March 20, 2014

தமிழகத்தில் தொடரும் சிறப்பு முகாம் கொடுமைகள்!

• தமிழகத்தில் தொடரும் சிறப்பு முகாம் கொடுமைகள்!

• தமிழக முதல்வர் அப்பாவி அகதிகளை விடுதலை செய்வாரா?

எந்தவித வழக்கும் இன்றி எவ்வித விசாரணையும் இன்றி எவ்வளவு காலம் தடுத்து வைப்பு என்பதும் தெரியாமல் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகளை தமிழக முதல்வர் ஜெயா அம்மையார் அவர்கள் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

நீதிமன்றங்கள் விடுதலை செய்த பின்பும் அகதிகளை சிறப்பு முகாமில் அடைத்து வைத்திருப்பது சட்ட விரோதமாகும். இந்த சட்ட விரோத அடைப்பினால் அகதிகள் பல துன்பங்களை அனுபவிக்கின்றனர். குடும்பங்கள் பிரியும் நிலைக்கே செல்கின்றன.

ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட தமிழர்களின் விடுதலைக்கு குரல் கொடுக்கும் மனித உரிமை அமைப்புகள் மற்றும் கட்சிகள்; இந்த அப்பாவி அகதிகளின் விடுதலைக்கும் குரல் கொடுக்க வேண்டும்.

ஒரு அகதி தனது நாட்டுக்கு திரும்பிச் செல்ல விரும்பினால் அவரை அனுமதிக்க வேண்டும் என்று ஜ.நா விதிகள் கூறுகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் திரும்பிச் செல்ல விருப்பம் தெரிவித்தும்கூட இதனை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தும் கூட தமிழக அரசு அவர்களை திரும்பிச் செல்ல அனுமதி மறுத்து அடைத்து வைத்திருப்பது சட்ட விரோதமாகும். மனிதாபிமானம் அற்றது.

ஈழத் தமிழ் அகதிகளை சிறப்பு முகாமில் அடைத்து வைத்திருக்கும் ஜெயா அம்மையாரை , அவ் அகதிகளை விடுதலை செய்ய மறுக்கும் ஜெயா அம்மையாரை, பல அகதிகளின் குடும்பங்களின் துன்பங்களுக்கு காரணமான ஜெயா அம்மையாரை சிலர் ஈழத்தாய் என்று அழைக்கின்றனர். அவர் பிரதமரானால் ஈழம் மலரும் என்றும் கூறுகின்றனர்.

சிறப்பு மகாமை மூட மறுக்கும் ஜெயா அம்மையார்,
அகதிகளை விடுதலை செய்ய மறுக்கும் ஜெயா அம்மையார்,
பிரதமரானால் எப்படி ஈழம் மலரும் நம்புவது?

No comments:

Post a Comment