Saturday, June 29, 2019

இது இந்திய அரசின் “பிக்பாஸ்” இவர்களும் ஓடவும் முடியாது. ஒழியவும் முடியாது!

•இது இந்திய அரசின் “பிக்பாஸ்”
இவர்களும் ஓடவும் முடியாது. ஒழியவும் முடியாது!
பிக்பாஸ் இல் பல கமராக்கள். அவர்கள் ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது என்கிறார் கமல். ஆனால் விரும்புபவர்கள் சுவர் ஏறி தப்ப முடியும்.
திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் அகதிகளும் ஓடவும் முடியாது. ஒழியவும் முடியாது. அதுமட்டுமல்ல சுவர் ஏறி தப்பவும் முடியாது. ஏனெனில் சுற்றிவர ஏ.கே -47 துப்பாக்கி ஏந்திய 72 பொலிசார் காவல் காக்கின்றனர்.
பிக்பாஸ் அதிக பட்சம் 100 நாட்கள் மட்டுமே வைக்கப்பட்டிருப்பார்கள். அதற்கே தன்னால் குழந்தைகளை பிரிந்து வாழ முடியவில்லை என்று வனிதா கண்ணீர் வடிக்கிறார்.
ஆனால் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டிருக்கும் அகதிகள் தங்கள் குழந்தைகளை குடும்பத்தை பிரிந்து வருடக் கணக்கில் இருக்கிறார்கள் எப்போது விடுதலை செய்யப்படுவோம் என்பது தெரியாமல்.
பிக்பாஸில் யாராவது ஒருவரின் சுயமரியாதைக்கு இழுக்கு எற்பட்டால் உடனே உலகெங்கும் மனிதவுரிமைவாதிகள் கொந்தளிப்பார்கள்.
ஆனால் சிறப்புமுகாமில் பொலிசார் தினமும் அகதிகளை “ அகதித் தேவடியாப் பயலுகளே அடித்துப் போட்டால் ஏன் என்று கேட்க யாருமற்ற அகதி நாய்களே” என்றுதான் ஏசுவார்கள்.
ஏன் இப்படி மரியாதைக் குறைவாக ஏசுகிறீர்கள் என்று அந்த அகதிகள் கேட்க முடியாது. கேட்டால் அடி, உதை எல்லாம் கிடைக்கும்.
இறுதியாக, பிக்பாஸ் நபர்களின் வீடியோக்களை பார்வையிட நீங்கள் விசேட அப்ஸ் டவுண்லோட் செய்ய வேண்டும்.
ஆனால் சிறப்புமுகாமில் அடைக்கப்பட்டவர்களின் வீடியோக்களை அவை எதுவுமின்றி பார்வையிடலாம்.

No comments:

Post a Comment