Saturday, June 29, 2019

நான் ரோஜாவை காணும்போது ரோஜா என்கிறேன்

நான் ரோஜாவை காணும்போது ரோஜா என்கிறேன்
நான் அதன் கீழ் முள்ளைக் காணும்போது முள் என்கிறேன்
நான் எதைக் காண்கின்றேனோ அதையேதான் நான் கூறுகின்றேன்
ஆனால் சிலர் முள்ளைக் காணும்போதும் அதை ரோஜா என்று கூறும்படி கோருகின்றனர்.
இன்னும் சிலரோ யாவற்றையும் கருப்பு அல்லது வெள்ளையாகவே பார்க்கும்படி கோருகின்றனர்.
மாறாக, சிவப்பு என்று ஒன்றும் இருக்கிறது என்றால் அதை ஏற்கமுடியாது என்று அடம் பிடிக்கின்றனர்.
அவர்கள் யாவற்றையும் புலி ஆதரவு அல்லது புலி எதிர்ப்புக்குள்தான் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
மாறாக, அவற்றையும்தாண்டி புரட்சிப் பார்வையில் பார்க்கும்படி கோரினால் அவர்களால் பார்க்கவும் முடியவில்லை. அதைப் புரிந்து கொள்ளவும் முடியவில்லை.
தோழர்கள் சண்முகதாசன், தமிழரசன், நெப்போலியன் எதைப் பார்த்தார்களோ அதையேதான் நான் பார்க்கிறேன்.
நான் தெளிவாகவும் உறுதியாகவும் பார்க்க முடிகிறது என்றால் அதற்கு ஓரே காரணம் இந்த தோழர்கள் என்னை தங்கள் தோள்களில் தாங்கிப் பிடித்திருக்கிறார்கள்.
அதனால்தான் என்னால் சிறிதும் அச்சமின்றி தைரியமாக பயணிக்க முடிகிறது.
தோழர்கள் தமிழரசன் நெப்போலியன் போன்றவர்களை கொன்றதுபோல் என்னையும் அவர்கள் ஒருவேளை கொல்ல முடியுமேயொழிய ஆனால் ஒருபோதும் என்னை தோற்கடிக்க முடியாது.

No comments:

Post a Comment