Saturday, June 29, 2019

கலைஞர் கருணாநிதியால் ஈழத் தமிழர்களை காப்பாற்றியிருக்க முடியாதா?

கலைஞர் கருணாநிதியால் ஈழத் தமிழர்களை காப்பாற்றியிருக்க முடியாதா?
கடந்த சனிக்கிழமை (15.06.19) லண்டனில் ஈஸ்ட்காம் நகரில் எழுத்தாளர் வாஸந்தியுடன் உரையாடல் நடைபெற்றது.
அப்போது “கலைஞர் கருணாநிதி மாநில முதலமைச்சர். அவருக்கு ஈழத் தமிழர்களை காப்பாற்றக்கூடிய அதிகாரங்கள் இல்லை” என்று அவர் கூறினார்.
அத்துடன் “ இலங்கை இன்னொரு நாடு என்பதால் அதில் இந்திய மத்திய அரசாலும் தலையிட முடியவில்லை” என்று கூறினார்.
“அப்படியென்றால் இந்திய மத்திய அரசு ஏன் இனப்பிரச்சனை தீர்விற்காக இலங்கை அரசுடன் ஒப்பந்தம் மேற்கொணடது?” என்று கேட்கப்பட்டபோது “ அது ராஜீவ் காந்தியின் ஆர்வம். அவரைக்கூட கொன்று விட்டார்களே” என்று அவர் பதில் அளித்தார்.
வாஸந்தி மட்டுமல்ல இந்து ராம், துக்ளக் சோ போன்ற எல்லா பார்ப்பணர்களுமே இப்படித்தான் தொடர்ந்து கூறிவருகிறார்கள்.
இவர்கள் கூறிவருவதை அப்படியே விழுங்கிவிட்டு நம்மவர் சிலரும் வாந்தி எடுக்கிறார்கள்.
இவர்களுக்கு பலதடவை பலமுறை போதுமான அளவிற்கு பதில் கூறிவிட்டோம். ஆனாலும் இவர்கள் திருந்த வில்லை. திருந்தப் போவதுமில்லை.
ஒவ்வொரு சொல்லுக்கும் பின்னால் ஒரு வர்க்கத்தின் நலன் ஒளிந்திருக்கிறது என்றார் தோழர் லெனின்.
கோடை விடுமுறைக்காக மொத்த குடும்பத்தோடு லண்டன் வந்து ஒரு வீட்டையே வாடகைக்கு எடுத்து தங்கியுள்ள வாஸந்தியின் சொல்லுக்கு பின்னால் எந்த வர்க்கத்தின் நலன் ஒளிந்துள்ளது என்பதை நாம் அறிவோம்.
கலைஞர் 3 மணி நேர உண்ணாவிரத நாடகம் போட்டார். இறுதியில் போர் நிறுத்தம் என்று அறிவித்தார். இதை நம்பி வெளியே வந்த பல ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டார்கள்.
இதுகுறித்து அதே கலைஞர் கரணாநிதியிடம் கேட்கப்பட்டபோது “மழை விட்டும் தூவானம் விடவில்லை” என சர்வசாதாரணமாக கூறினார்.
அதாவது கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்கள் கருணாநிதிக்கு வெறும் தூவானமாகவே இருந்துள்ளது.
அதன்பின்பு புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் நடேசன் கருணாநிதியுடன் பேச வேண்டும் என்று அவரது மகன் கனிமொழியிடம் கேட்டபோது “ அருகில் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார். நீங்கள் என்னிடம் பேசுங்கள்” என்று கனிமொழி கூறினார்.
அதாவது அருகில் இருந்தும்கூட உயிராபத்து காப்பாற்றுங்கள் என்று கெஞ்சிய அரசியல் பிரிவு தலைவரிடம்கூட பேச விரும்பாதவரே இந்த உலகத் தமிழின தலைவர் கருணாநிதி.
இருந்தும், கருணாநிதியே ஏற்பாடு செய்திருக்கிறார் என்று கனிமொழி மூலம் உறுதிப்படுத்திக்கொண்ட பின்பு அதை நம்பியே நடேசன் குழுவினர் தஞ்சம் அடைய முடிவு செய்தனர்.
கருணாநிதியை நம்பி வெள்ளைக் கொடியுடன் தஞ்சம் அடையும்போதே நடேசன் குழவினர் அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இப்போது எமது கேள்வி என்னவெனில் இந்த கொலையில் கருணாநிதியின் பங்கை வாஸந்தி எப்படி பார்க்கிறார்?
அதுமட்டுமல்ல கருணாநிதி காப்பாற்றவில்லை என்று நாம்தமிழர் கட்சியினர் மட்டுமே கூறிவருவாதாக வாஸந்தி கூறினார்.
நாம் தமிழர் கட்சி 2012ம் ஆண்டுக்கு பின்னரே உருவானது. ஆனால் 2009ம் ஆண்டே பல தமிழ் அமைப்புகள் கருணாநிதி மீது இக் குற்றச்சாட்டை கூறிவிட்டன.
கருணாநிதிக்கு காப்பாற்ற அதிகாரம் இல்லையா என்பதைவிட காப்பாற்றும் விருப்பமே அவருக்கு இருக்கவில்லை என்பதே பலரின் ஆதங்கமாகும்.
அதுமட்டுமன்றி, நாம்தமிழர் கட்சி மட்டுமே தமிழ்தேசியம் பேசுவதாகவும் அவர்களால் ஒருபோதும் ஆட்சியை பிடிக்கும் அளவிற்கு வளர முடியாது என்றும் வாஸந்தி கூறினார்.
அவருக்கு தமிழ்தேசியம் வளரக்கூடாது என்பது விருப்பமாக இருக்கலாம். ஆனால் 1983லே தோழர் தமிழரசன் போன்றவர்கள் தமிழ் தேசியத்தை முன்வைத்து போராடியதைக்கூட இவர் தெரியாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

No comments:

Post a Comment