Saturday, June 29, 2019

•ச்சே கரடியே காறித் துப்பி விட்டதே?

•ச்சே கரடியே காறித் துப்பி விட்டதே?
செய்தி – எதிர்க்கட்சி தலைவருக்கு வழங்கப்பட்ட சொகுசு பங்களா மற்றும் வாகனத்தை சம்பந்தர் எடுத்துச் சென்றுவிட்டார் - மகிந்த ராஜபக்ச
அப்பவே எடுத்துச் சொன்னோம்
திரும்ப திரும்ப சொன்னோம்
சுமந்திரன் பேச்சை கேட்க வேண்டாம் என்று
இப்ப பாருங்க
நடுரோட்டில வைச்சு
கட்டின வேட்டியை மட்டுமல்ல
கட்டியிருக்கும் கோமணத்தையும் உருவுறாங்களே
இந்த வயசில
இது தேவையா?
சம்பந்தர் அய்யா,
பிளீஸ் !
உங்களுக்காக இல்லாவிட்டாலும்
தமிழர்களின் மானத்திற்காவது
சொகு பங்களாவையும் வாகனங்களையும்
திருப்பி ஒப்படைத்து விடுங்கள்.

No comments:

Post a Comment