Tuesday, April 12, 2016

•ஈழத் தமிழர்களுக்கு பொய் வாக்குறுதியளிக்காத கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி!

•ஈழத் தமிழர்களுக்கு பொய் வாக்குறுதியளிக்காத
கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி!
கலைஞர் கருணாநிதி அவர்கள் தமது தேர்தல் அறிக்கையில்
•தமிழீழம் அமைக்க குரல் கொடுப்பேன் என்று பொய் கூறவில்லை
•ஈழத் தமிழர்களுக்காக "டெசோ" நடத்துவேன் என்று பொய் கூறவில்லை
•போர்க்குற்ற விசாரணைக்கு குரல் கொடுப்பேன் என்று பொய் கூறவில்லை
•தான் ஆரம்பித்த சிறப்பு முகாமை மூடுவேன் என்று பொய் கூறவில்லை
•அகதிகளுக்கு குடியுரிமை பெற்று கொடுப்பேன் என்று பொய் கூறவில்லை
இதுபோன்ற எந்தவொரு பொய்யும் கூறாமல் ,
ஈழத் தமிழர்கள் குறித்து எதுவுமே கூறாமல்,
தனது தேர்தல் அறிக்கையை முன்வைத்தமைக்கு கலைஞர் அவர்களுக்கு நன்றி. நன்றி. நன்றி.
ஊடகங்களுக்கு பணம்
கூட்டணி கட்சிக்கு பணம்
வோட்டுக்கு பணம்
பேஸ்புக்கில் பதிவு போடவும் பணம்
இப்படி எல்லாவற்றுக்கும் பணம் கொடுத்து வெற்றியை பெற்றுவிடலாம் என கலைஞர் நம்புகிறார்.
காங்கிரஸ் கட்சி தமிழ் இன அழிப்பிற்கு இதுவரை வருத்தம் தெரிவிக்கவில்லை
காங்கிரஸ் கட்சி தமிழ் இன அழிப்பை இனி மேற்கொள்ளாது என்று உறுதியளிக்கவில்லை.
இந் நிலையில் காங்கிரஸ் கட்சியுடன் கலைஞர் கூட்டணி வைத்திருப்பதன் அர்த்தம் என்ன?
காங்கிரஸ் கலைஞர் கூட்டணி வெற்றிபெற்றால்,
தமிழ் இனத்தை அழித்தாலும் தமிழ் மக்கள் வோட்டு போடுவார்கள் என்று அர்த்தமாகும்
இதனால் எதிர்காலத்தில் எந்தவொரு கட்சியும் தமிழின அழிப்பை மேற்கொள்ள தயங்காது
ஊழல் செய்து அந்த பணத்தின் மூலம் வெற்றியைப் பெறலாம் என்ற நிலை உருவாகும்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இந்த தேர்தலில்
யார் வெற்றி பெற வேண்டும் என்பதைவிட
காங்கிரஸ் கலைஞர் கூட்டு வெற்றி பெறக்கூடாது என்பதே முக்கியமாகும்.
கலைஞர் அவர்களே!
தமிழின அழிப்பிற்கு ஏன் துணை போனீர்கள் என்று உங்களை நான் கேட்கப்போவதில்லை
பிரபாகரனின் வயதான தாயாரை ஏன் திருப்பி அனுப்பினீர்கள் என்று உங்களை நான் கேட்கப்போவதில்லை
பாலகன் பாலச்சந்திரனை கொலை செய்த காங்கிரஸ் கட்சியுடன் ஏன் கூட்டு சேர்ந்தீர்கள் என்று உங்களை நான் கேட்கப்போவதில்லை
மகிந்த ராஜபக்சவுடன் உங்கள் மகள் கனிமொழி ஏன் கைகுலுக்கி பரிசில்கள் பெற்றார் என்று உங்களை நான் கேட்கப்போவதில்லை
உங்களிடம் நான் கேட்க விரும்புவதெல்லாம் நீங்கள் தத்து எடுத்து வளர்த்த அந்த அகதிச் சிறுவன் மணி எங்கே?
.

No comments:

Post a Comment