Friday, April 29, 2016

•உள்ளவனுக்கு ஒரு நீதி! இல்லாதவனுக்கு இன்னொரு நீதி! இதுதானா இந்திய நீதி?

•உள்ளவனுக்கு ஒரு நீதி!
இல்லாதவனுக்கு இன்னொரு நீதி!
இதுதானா இந்திய நீதி?
செய்தி- ஆடிட்டர் ராதாகிருஸ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் ஜெயேந்திரர் உட்பட அனைவரும் விடுதலை !
முன்பு சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரர் விடுதலை செய்யப்பட்டார். ஏனெனில் சங்கரராமன் தன்னைத்தானே குத்தி மரணமடைந்தார்
தற்போது ராதாகிருஸ்ணன் தாக்கப்பட்ட வழக்கிலும் ஜெயேந்திரர் விடுதலை செய்யப்பட்டார் ஏனெனில ;ராதாகிருஸ்ணன் தன்னைத்தானே தாக்கிக்கொண்டார்.
நடிகர் சல்மான்கான் கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டார்
ஜெயா அம்மையார் ஊழல் வழக்கில் விடுதலை செய்யப்பட்டார்
தண்டனை வழங்கிய போதும் நடிகர் சஞ்சய்தத் விடுதலை செய்யப்பட்டார்.
ஆனால் 25 வருடமாகியும் பேரறிவாளன் விடுதலை செய்யப்படவில்லை
தனது சுகயீனமுற்று இருக்கும் தந்தையை பார்வையிடுவதற்கு பரோல் லீவுகூட அவருக்கு வழங்கப்படவில்லை.
பல வருடங்களாக அடைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை
சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் அப்பாவி அகதிகள் விடுதலை செய்யப்படவில்லை.
மதுரையில் கைது செய்யப்பட்ட தமிழ் இன உணர்வாளர்கள் இரண்டு வருடமாகியும் விடுதலை செய்யப்படவில்லை.
அவர்கள் மீதான விசாரணை முடிவடைந்தபோதும் தீர்ப்பு கூறாமல் வேண்டுமென்றே இழுத்தடிக்கப்படுகிறது. அவர்களுக்கு ஜாமீன் வழங்கவும் மறுக்கப்படுகிறது.
இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்கிறார்கள். இங்கு சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறார்கள்.
ஆனால் இங்கு உள்ளவர்களுக்கு ஒரு நியாயமும் இல்லாதவர்களுக்கு இன்னொரு நியாயமும் வழங்கப்படுகிறது.
இதுதான் இந்திய நியாயமா?

No comments:

Post a Comment