Tuesday, April 12, 2016

•ஏன் தமிழ் இனத்தில் முடியாது?

•ஏன் தமிழ் இனத்தில் முடியாது?
செய்தி- துருக்கிய தம்பதிகள் தம் திருமணநாளில் 4000 சிரிய அகதிகளுக்கு உணவு அளித்துள்ளார்கள்.
துருக்கிய புதுமணத் தம்பதிகள் தம் திருமண ஆடம்பர செலவைக் குறைத்து நான்காயிரம் சிரிய அகதிகளுக்கு உணவளித்து தமது மனிதாபிமானத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
வன்னி மண்ணில் வறுமையின் கொடுமையில் தாய் குழந்தைகளை கிணற்றில் விசிக் கொள்கிறார்.
கிளிநொச்சியில் பரீட்சைக் கட்டணம் கட்ட வழியின்றி சிறுவன் ஒருவன் திருட முயன்றதாக நீதிமன்றில் நிறுத்தப்பட்டான்.
இறந்த முன்னாள் பெண் போராளி ஒருவர் தன்னை அரசு செலவில் அடக்கம் செய்யுமாறு கோரியிருக்கின்றார்.
இத்தகைய கொடிய நிலையை மாற்ற தங்களால் இயன்ற உதவியை செய்ய வேண்டிய புலம்பெயர்ந்த தமிழர் சிலர் ஆடம்பரமாக திருமணம் செலவு செய்கிறார்கள்.
திருமணச் செலவு மட்டுமல்ல சாமத்திய சடங்கைக்கூட கெலிகொப்டர் பிடித்து வெட்டி பந்தா காட்டி செய்கிறார்கள்.
பலர் தம் உறவுகளுக்கு உதவி செய்கிறார்கள் என்பது உண்மைதான். இத்தகையவர்களின் உதவி இல்லையேல் தாயகத்தில் எமது மக்கள் இத்தனை விரைவாக மீண்டிருக்க முடியாது.
ஆனால் சிலர் செய்யும் வீண் ஆடம்பரச் செலவுகள் எம் இனத்தையே தலை குனிய வைக்கிறது.
முதலில் சிறு பிள்ளைகளுக்கு பிறந்தநாள் கொண்டாடினார்கள். இப்போது 60 , 70 வயது கிழவர்களுக்குகூட பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள். எல்லாம் பணத் திமிர்.
அவர்கள் தண்ணியைப் போட்டுவிட்டு காலைத் தூக்கி ஆடுவதை பார்க்கும்போது நாய் காலைத் தூக்கி மூத்திரம் பெய்வது போல இருக்கிறது. சகிக்க முடியவில்லை.
தமிழ் சமூகத்தில் பரவும் இந்த கொடிய நோயை ஆரம்பத்திலேயே கிள்ளியெறிய வேண்டும்.
தமிழ் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒன்றுபட்டு தமது பிரச்சனைகளை எதிர்கொண்டால் உலகில் சிறந்த ஒரு இனமாக திகழ முடியும்.
அழிவில் இருந்து மீண்டு எழ தமிழ் மக்களுக்கு வேண்டியது ஒற்றுமையும் பரஸ்பரம் உதவியுமே!
நிச்சயம் முடியும்.


No comments:

Post a Comment