Friday, April 29, 2016

•சம்பூர் அனல் மின்நிலையம் இந்தியாவின் இன்னொரு முள்ளிவாய்க்காலா?

•சம்பூர் அனல் மின்நிலையம்
இந்தியாவின் இன்னொரு முள்ளிவாய்க்காலா?
இலங்கை அரசு முள்ளிவாய்க்காலில் தமிழின அழிப்பை மேற்கொள்ள உதவிய இந்திய அரசு சம்பூரில் அனல்மின் நிலையம் அமைத்து தமிழ்மக்களை நேரிடையாக அழிக்க முனைகிறது.
அமெரிக்கா சீனா போன்ற நாடுகள் அனல்மின் நிலையத்தின் ஆபத்துகளை உணர்ந்து மூடிவரும் நிலையில் இந்தியாவானது இலங்கையில் அனல்மின் நிலையம் அமைத்து மக்களை அழிக்க முனைகிறது.
500மில்லியன் அமெரிக்க டாலரை கடனாகப்பெற்று தன்னுடைய நாட்டில் சூரிய மின்சாரத்தை தயாரிக்கும் திட்டத்தை மேற்கொள்ளும் இந்தியா, இலங்கையில் அனல்மின்சாரம் தயாரிக்க முனைவது அதன் இரட்டை வேடத்தைக் காட்டுகிறது.
சம்பூர் அனல்மின் நிலையம் வேண்டாம் என தமிழ் மக்கள போராடுகிறார்கள். முஸ்லிம் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள். சிங்கள மற்றும் வேடவ இன மக்களும்கூட எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
ஆனால் தமிழ் மக்கள் நலனில் அக்கறை உள்ளதாக கூறிக்கொள்ளும் இந்தியா தமிழ் மக்களின் விருப்பத்திற்கு மாறாக அனல்மின்நிலையம் அமைக்கிறது.
அனல் மின் நிலையத்தை தடுத்து நிறுத்த வேண்டிய தமிழ் மக்களின் தலைவரான சம்பந்தர் அய்யா "இந்தியா போனால் சீனா வந்தவிடும்"; என்று மக்களை மிரட்டுகிறார்.
அதாவது அனல் மின் நிலையம் வெளியேற்றும் சீன சாம்பலை விட இந்திய சாம்பலினால் மக்கள் சாவது மேல் என அவர் கருதுகிறார்.
இன்னொரு தலைவரான மாவை சேனாதிராசா "இந்தியா தீர்வு பெற்று தரவுள்ளதால் அதனை வெளியேறும்படி எம்மால் கேட்க முடியாது" என்கிறார்.
யுத்தம் முடிந்து 7 வருடமாகிவிட்டது. இன்னும் எந்த தீர்வையும் இந்தியா பெற்று தரவில்லை. இனியும் பெற்றுதரும் என நம்பவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. ஆனால் மாவை சேனாதிராசா தீர்வக்காக சம்பூர் மக்களை சாகும்படி கேட்கிறார்.
இந்தியா அமைக்கும் சம்பூர் அனல்மின் நிலையமானது வருடம் ஒன்றிற்கு ,
•3.7 மில்லியன் தொன் காபனீரொட்சைட்டையும்
•10,200 தொன் நைதரசன் ஒக்சைட்டையும்
•10,000 தொன் கந்தகவீரொட்சைட்டையும்
•720 தொன் காபனோரொட்சைட்டையும்
•500 தொன் தூசியையும்
•ஆசனிக், பாதரசம், குரோமியம், ஈயம், நிக்கல் உள்ளிட்ட இ,ன்னும் நஞ்சுகளையும் வெளியிடப்போகிறது.
இத்தகைய நஞ்சுகள் மூலம் மக்கள் சுவாசநோய், இதயநோய், நரம்புநோய் உள்ளிட்ட பல நோய்களினால் பீடிக்கப்பட்டு வருடத்திற்கு ஆயிரக் கணக்கில் பலியாகப் போகிறார்கள்.
இதை உணர்ந்த அனைத்து இன மக்களும் அனல்மின் நிலையத்தை எதிர்க்கின்றார்கள். ஆனால் என்ன எதிர்ப்பு வந்தாலும் அனல்மின் நிலையத்தை அமைத்தே தீருவோம் என மின்சக்தி அமைச்சர் கூறுகிறார்.
இந்தியாவின் நலனுக்காக அப்பாவித் தமிழ் மக்களை பலி கொடுக்க இலங்கை அரசு முனைகிறது.

No comments:

Post a Comment