Tuesday, April 12, 2016

•நல்லாட்சி அரசின் இன்னொரு முகம்?

•நல்லாட்சி அரசின் இன்னொரு முகம்?
பாஸ்போட் வழக்கில் கைது செய்யப்பட்ட விமல் வீரவன்ச உடனேயே ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவர் இதுவரை விசாரணை செய்யப்படவும் இல்லை. தண்டிக்கப்படவும் இல்லை.
பாஸ்பொட் வழக்கில் கைது செய்யப்பட்ட குமார் குணரட்ணம் 150 நாட்களுக்கு மேலாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. அவர்மீதான வழக்கில் அவருக்கு ஒரு வருட தண்டனையும் 50 ஆயிரம் ரூபா தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது.
ஒரே மாதிரியான வழக்கில் இரு அணுகுமுறைகள். விமல் வீரவன்சவுக்கு ஒரு நியாயம்.
குமார் குணரட்ணத்திற்கு இன்னொரு நியாயம். இதுதான் நல்லாட்சி அரசின் நியாயமா?
இலங்கை மத்திய வங்கி தலைவர் சிங்கப்பூர் பிரஜையான மகேந்திரன் என்பவருக்கு ஒரே நாளில் இலங்கை குடியுரிமை வழங்கப்பட்டது. ஆனால் குமார் குணரட்ணத்திற்கு இலங்கை குடியுரிமை மறுக்கப்படுகிறது. இது என்ன நியாயம்?
குமார் குணரட்ணம் இலங்கையில் பிறந்தவர்.
குமார் குணரட்ணம் இலங்கையில் படித்தவர்
குமார் குணரட்ணம் இலங்கையில் திருமணம் முடித்தவர்.
குமார் குணரட்ணம் இலங்கையில் போராடியவர்.
பாதுகாப்பு காரணமாக இலங்கையை விட்டு வெளியேறியவர்
அவர் மீண்டும் இலங்கையில் வாழ அருகதையில்லையா?
அவருக்கு குடியுரிமை மறுப்பது என்ன நியாயம்?
அவரை சிறையில் அடைப்பது என்ன நியாயம்?
ஒருபுறம் வெளியேறிய தமிழ் மக்களை திரும்பி வரும்படி அழைப்பு விடுக்கும் ஜனாதிபதி மைத்திரி மறுபுறம் திரும்பி வந்த குமார் குணரட்ணத்தை சிறையில் அடைப்பது ஏன்?
இதுதான் நல்லாட்சி அரசின் நியாயமா?
குமார் கணரட்ணம் செய்த குற்றம்தான் என்ன?
அவர்,
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரியது குற்றமா?
காணமல் போனோருக்கு ஆதரவாக குரல் கொடுத்தது குற்றமா?
தமிழ் சிங்கள மாணவர்களை ஒன்று திரட்டி போராடியது குற்றமா?
தமிழ் சிங்கள அனைவருக்கும் சமவுரிமை என்று கூறியது குற்றமா?
அல்லது,
அவர் முன்னிலை சோசலிசக்கட்சியை உருவாக்கியது தவறா?
இலங்கை மக்களுக்காக தன் வாழ்வை அர்ப்பணித்து போராடியது தவறா?
எல்லாவற்றையும்விட அவர் தமிழனாக பிறந்தது தவறா?
எதற்காக அவரை தண்டிக்க வேண்டும்?
எதற்காக அவர் குடியுரிமையை மறுக்க வேண்டும்?
நல்லாட்சி அரசு இதற்கு பதில் தருமா?

No comments:

Post a Comment