Tuesday, April 12, 2016

•தமிழகத்தில் ஈழ அகதிப் பெண் பொலிஸாரால் பாலியல் வல்லுறவு

•தமிழகத்தில் ஈழ அகதிப் பெண் பொலிஸாரால் பாலியல் வல்லுறவு
செய்தி- தமிழகத்தில் உள்ள மண்டபம் இலங்கை அகதிகள் முகாமில் 19 வயது ஈழஅகதி பெண் ஒருவர் நான்கு பொலிஸாரால் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது.
மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸார் நான்கு பேரும் தலைமறைவாகியுள்ளதாகவும் ஈழஅகதி பெண் கொடுத்த புகாரின் பேரில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரிவு அவர்களை தேடி வருவதாகவும் செய்தி தெரிவிக்கின்றது.
பாதிக்கப்பட்ட ஈழஅகதி பெண் இராமநாதபுரம் தலைமை அரசு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அறியவருகிறது.
வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்
ஈழ தமிழ் அகதிகளை மட்டும்
சிறப்புமுகாமில் அடைத்து வைக்கும்
பொய் வழக்கு போட்டு துன்புறுத்தும்
கூட்டாக சேர்ந்து பாலியல் வல்லுறவு செய்யும்
விசாரணைக்கு என அழைத்து சென்று கை கால்களை முறிக்கும்
ஏன் என்று கேட்டால் தொப்புள்கொடி உறவு என்று விளிக்கும்.
இந்தியாவில்,
பசு மாட்டுக்காக குரல் கொடுக்க மோடி இருக்கிறார்.
காளை மாட்டிற்காக குரல் கொடுக்க உச்ச நீதிமன்றம் இருக்கிறது.
இந்து தமிழீழத்திற்காக குரல் கொடுக்க காசி அனந்தன் இருக்கிறார்.
ஆனால் அப்பாவி அகதிகளுக்காக குரல் கொடுக்க யார் இருக்கிறார்கள்?
•கடந்தமாதம் வருவாய்துறை அதிகாரியின் தொல்லை பொறுக்காமல் ஆறு பிள்ளைகளின் தந்தையான ஈழ அகதி ஒருவர் தற்கொலை செய்தார்.
•அடுத்து சென்னையில் புழல் முகாமில் இருந்து விசாரணைக்கு என அழைத்து செல்லப்பட்ட ஈழ அகதி ஒருவர் பொலிசாரால் கால் முறித்து அனுப்பப்பட்டார்.
•இப்போது ஒரு ஈழஅகதிப் பெண் இராமநாதபுரத்தில் நான்கு பொலிசாரால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால் இதுவரை எந்தவொரு அதிகாரியும் இதற்காக தண்டிக்கப்படவில்லை.
இதன் அர்த்தம் என்ன?
ஈழஅகதிகள் என்றால் கேட்பதற்கு யாருமற்ற அனாதைகள்தானா?
அதனால்தான் ஈழ அகதிகள் தொடர்ந்து வதைக்கப்படுகிறார்களா?
ஒருபுறம் இலங்கை ராணுவம் பாலியல் வல்லறவு செய்கின்றனர்
மறுபுறம் தமிழக பொலிசார் பாலியல் வல்லறவு செய்கின்றனர்
ஈழ தமிழ் பெண்கள் பாதுகாப்பிற்கு எங்கு செல்ல முடியும்?
சமுத்திரத்தில் விழுவதைத் தவிர வேறு வழியுண்டா?


No comments:

Post a Comment