•பிரித்தானிய தமிழ் வர்த்தக சம்மேளத்தினால் நடாத்தப்பட்ட "லண்டன் தமிழர் சந்தை"
லண்டனில் கறோ என்னும் இடத்தில் நேற்றும் இன்றும் காலை 10 மணி முதல் மாலை 8 மணிவரை "லண்டன் தமிழர் சந்தை" இடம்பெற்றது.
நூற்றுக்கு மேற்பட்ட தமிழ் வர்த்தக நிறுவனங்கள் கலந்துகொண்ட இவ் நிகழ்வு பிரித்தானிய வர்த்தக சம்மேளத்தினால் நடாத்தப்பட்டுள்ளது.
பிரித்தானிய தமிழ் வர்த்தக சம்மேளனம் ஒரு இலாப நோக்கற்ற தொண்டு நிறுவனம்.
இது தமிழ் வர்த்தகர்களை பிரித்தானிய மற்றும் சர்வதேச அரங்கில் ஒரு பலம் பொருந்திய சக்தியாக உருவாக்குவதையே நோக்கமாக கொண்டிருக்கிறது என தெரிவிக்கின்றார்கள்.
ஆனால் கடந்த இரு நாட்கள் நடைபெற்ற நிகழ்வில் தமிழ் வர்த்தக சமுதாயம் ஒரு பலம் பொருந்திய சக்தியாக உருவாவதற்குரிய எந்தஒரு திட்டமிடலையும் காண முடியவில்லை.
"லைக்கா" போன்ற முன்னனி தமிழ் வர்த்தக நிறுவனங்கள் பங்குபெற்றாமை ஏன் என்று புரியவில்லை.
அடுத்த நிகழ்வுகளில் தமிழ் வர்த்தக நிறுவனங்கள் அனைத்தையும் உள்வாங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
எந்த இலக்கத்தில் என்ன வர்த்தக நிறுவனம் இருக்கிறது என்ற விபர பட்டியல் வாசலில் வைக்கப்படவில்லை.
எந்த ஒழுங்கில் செல்ல வேண்டும் என்ற குறியீடுகள் இல்லை. குறிப்பாக கழிப்பறை எங்கே இருக்கிறது என்பதுகூட காட்டப்படவில்லை.
பல்வேறு கலை நிகழ்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் அவ் நிகழ்ச்சி நேர விபரம் முன்கூட்டி அறிய முடியவில்லை.
இதுகுறித்து பிரித்தானிய தமிழ் வாத்தக சம்மேளனத்துடன் உரையாட விரும்பினால் அவர்களது இடத்தில் இது குறித்து பதில் அளிக்க யாரும் இருக்கவில்லை.
தமிழ் வர்த்தக சமுதாயத்தை முன்னேற்ற விரும்பும் நோக்கம் நல்லது. அதற்கான இவர்களது முயற்சி பாராட்டுக்குரியது. ஆனால் அதை அடையக்கூடிய நல்ல திட்டத்தை தீட்டாவிடின் யாவும் பயனற்றதாகவே முடியும்.
No comments:
Post a Comment