Tuesday, April 12, 2016

•தமிழ் மக்களுக்கு ஒரு நியாயம் சிங்கள மக்களுக்கு இன்னொரு நியாயம் இதுதான் "நல்லாட்சி" அரசின் நியாயமா?

•தமிழ் மக்களுக்கு ஒரு நியாயம்
சிங்கள மக்களுக்கு இன்னொரு நியாயம்
இதுதான் "நல்லாட்சி" அரசின் நியாயமா?
வவுனியாவில் ராணுவத்திற்கு எதற்கு குடியிருப்பு என்று கேட்டால் அதில் வித்தியாவின் குடும்பத்திற்கு ஒரு வீடு வழங்கப்படும் என்கிறார்கள்.
வித்யாவுக்கு நீதி எங்கே என்று கேட்டால் நயினாதீவில் 67 அடி புத்தர் சிலை நிறுவப்படும் என்கிறார்கள்.
வன்னியில் மக்களுக்கு வீடு கட்டுங்கள் என்று கேட்டால் கொக்கிளாயில் புத்தவிகாரை கட்டப்படுகிறது என்கிறார்கள்.
சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்யுங்கள் என்று கேட்டால் சாவகச்சேரியில் தற்கொலை அங்கியை வைத்துவிட்டு எடுத்துக் காட்டுகிறார்கள்.
காணாமல் போனோரை கண்டுபிடியுங்கள் என்றால் போரில் வென்றாலும் தமிழீழ கோரிக்கையை தம்மால் அழிக்க முடியவில்லை என்கிறார்கள்.
பிரபாகரனின் சரணடைந்த மகனை ஈவிரக்கமின்றி சுட்டுக்கொன்றவர்கள் விஜயவீராவின் குடும்பத்தை பாதுகாத்து அவர் பிள்ளைகளுக்கு கல்விவாய்ப்பு அளிக்கின்றனர்.
பிரபாகரனின் வீட்டைக்கூட இடித்து தரை மட்டமாக்கியவர்கள் விஜயவீராவிற்கு சிலை அமைத்து கொண்டாட அனுமதித்துள்ளார்கள்.
தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால்; நினைவு தினம் கொண்டாட அனுமதி தர மறுக்கின்றவர்கள் ஜே.வி.பி மாவீரர் தினம் கொண்டாட அனுமதிக்கின்றார்கள்.
யாழ் பல்கலைகழக மாணவர்கள் மெழுகுவர்த்தி கொளுத்தி அஞ்சலி செலுத்தினால் பிடித்து அடித்து மண்டையை உடைப்பவர்கள் ஜே.வி.பி பொஸ்டர் அடித்து மாவீரர் தினம் கொண்டாட அனுமதிக்கின்றார்கள்.
இப்படி தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமும் சிங்கள மக்களுக்கு இன்னொரு நியாயமும் வழங்குவதுதான் இலங்கை அரசின் நியாயமா?
இவ்வாறு இலங்கை அரசு செயற்படுவதை எமது சம்பந்தர் அய்யா நல்லாட்சி அரசு என்று கூறுகிறார். அவ்வாறு கூறும் அவருக்கு வாழ்நாள்வீரர் பட்டம் நம்மவர் சிலர் கொடுக்கிறார்கள்.
இன்னும் எத்தனை நாளுக்கு இந்த அவலத்தை சகித்துக்கொள்வது?
குறிப்பு-
தமது மாவீரர் தினத்தை கொண்டாடும் ஜே.வி.பி, முள்ளிவாய்க்காலில் பலியான தமது உறவுகளுக்கு தமிழ் மக்கள் அஞ்சலி செலுத்துவதை மறுக்காது என நம்புகிறோம்.
அடிக்கடி யாழ்பாணத்திற்கு விஜயம் செய்யும் ஜே.வி.பி தலைவர்கள் இம்முறை தாங்களே முன்நின்று அஞ்சலி நிகழ்வை நடத்த முன்வருவார்களா?

No comments:

Post a Comment