Wednesday, November 30, 2022

உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட 4

உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட 4 ஈழத்தமிழர்கள் தமிழக திராவிட அரசால் சிறையைவிடக் கொடிய சிறப்புமுகாமில் அடைப்பு. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்பதாக வாக்குறுதி அளித்த தமிழக அரசு இந்த நாலு ஈழத் தமிழர்களையும் சிறப்புமுகாமில் அடைத்திருப்பது உச்சநீதிமன்றத்தை அவமதிப்பதாகும். இந்த எழுவர் விடுதலைக்கு திமுக அரசே காரணம் என்று உரிமை கோரியவர்கள் இப்போது இந்த இந்த நால்வரையும் சிறப்புமுகாமில் அடைத்தது தமிழக திராவிட அரசு என்பதை ஏற்றுக்கொள்வார்களா? நாடு திரும்பிச் செல்ல விரும்பாத அகதிகளையே சிறப்புமுகாமில் அடைக்க முடியும். ஆனால் சாந்தன் இலங்கை திரும்பிச் செல்ல விருப்பம் தெரிவித்தும் அவரை சிறப்புமுகாமில் அடைத்திருப்பது தமிழக திராவிட அரசின் வன்மத்தைக் காட்டுகிறது. 1990ம் ஆண்டு இந்த கொடிய சிறப்புமுகாமை உருவாக்கியவர் கலைஞர் கருணாநிதி. இப்போது மகன் ஸ்டாலின் அந்த சிறப்புமுகாமில் தொடர்ந்து ஈழத் தமிழர்களை அடைத்து சித்திரவதை செய்கிறார். இதுதான் திராவிட திமுக அரசு ஈழத் தமிழர் மீது காட்டும் அக்கறை என்பதை உலகம் அறிந்து கொள்ளட்டும்.

No comments:

Post a Comment