Wednesday, November 30, 2022

யாழ்ப்பாணத்தில் பிறந்து மலையகம் சென்று

யாழ்ப்பாணத்தில் பிறந்து மலையகம் சென்று மலையக மக்கள் விடுதலை முன்னணி (ULO)அமைத்து போராடியவேளை இந்திய உளவுப்படையால் கொல்லப்பட்டவர் தோழர் நெப்போலியன். ஈழப் போராளிகள் மலையக மக்கள் பற்றி அக்கறை கொள்ளவில்லை என பிரச்சாரம் செய்யும் திராவிடம் இந்த வரலாறு அறிவார்களா? இந்திய அரசின் எற்பாட்டில் ஈழப் போராளிகள் சிங்கள அரசுடன் திம்புவில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது வைத்த முதல் கோரிக்கை மலையக தமிழருக்கு பிரஜாவுரிமை வழங்க வேண்டும் என்பதே. அதனாலேயே வேறு வழியின்றி அப்போதைய ஜனாதிபதி ஜெயவர்த்தனா மலையக மக்களுக்கு பிராஜாவுரிமை வழங்கினார். இனியாவது இந்த வரலாறுகளை அறிந்துவிட்டு (200 ரூபா) திராவிடம் பேச வேண்டும்.

No comments:

Post a Comment