Wednesday, November 30, 2022

ராம் சேது

•ராம் சேது தன் கையால் தன் கண்ணைக் குத்துவதுபோல் தமிழன் (லைக்கா)பணத்தில் தமிழனுக்கு எதிராக எடுக்கப்பட்டிருக்கும் படம் ராம் சேது. ராமர் பாலம் கட்டினார் என்று படம் எடுத்திருக்கிறார்கள். அது மட்டுமன்றி போராளிகளையும் தேவையில்லாமல் இதில் இணைத்து கொச்சைப்படுத்தியிருக்கிறார்கள். ராமர் பாலத்தில் காணப்படும் திட்டுக்கள் போன்று பல திட்டுக்கள் மன்னார் மற்றும் ராமேஸ்வரம் கடல் பகுதிகளில் உண்டு. கச்சதீவு கூட இப்படியான் ஒரு திட்டுதான். திட்டுக்கள் ஒன்றாக சேர்ந்திருப்பது போன்றும் அவற்றில் நீரின் உயரம் 6 இஞ்ச் என்றும் காட்டுகிறார்கள். இது தவறு. திட்டுக்களுக்கிடையே ஆழமான பகுதி மட்டுமல்ல கடுமையான நீரோட்டமும் உண்டு. எனவே படத்தில் காட்டுவது போன்று நடந்து செல்ல முடியாது. ராமர் பாலம் என்பது மக்களின் நம்பிக்கை என்றும் அதனால் அதை உடைக்கக்கூடாது என்கிறார்கள். உலகம் தட்டையானது என்றுகூட மக்களின் நம்பிக்கையாக இருந்தது. ஆனால் அது உடைக்கப்பட்டது. அதேபோன்று ராமர் கட்டிய பாலம் என்ற நம்பிக்கையும் விஞ்ஞானபூர்வமாக உடைக்கப்பட வேண்டும். ஆனால் ஆரியர்கள் அன்று ராமாயணம் என்ற இதிகாசம் மூலம் உருவாக்கிய நம்பிக்கையை இன்றும் தமிழன் பணத்தில் கட்டிக்காக்க முனைகிறார்கள். ஆரியர் எப்போதும் தந்திரசாலிகளாகவே இருக்கின்றனர்.

No comments:

Post a Comment