Sunday, June 30, 2024

பொதுவாக ஒருவர் ஒரு நாட்டில்

•பொதுவாக ஒருவர் ஒரு நாட்டில் தொடர்ந்து 7 வருடங்கள் வாழ்ந்தால் அவருக்கு குடியுரிமை வழங்கப்டுவது வழமை. •ஒருவர் அந்த நாட்டில் திருமணம் செய்தால் அதன் மூலமும் குடியுரிமை வழங்கப்படுவது வழமை. •ஒரு குழந்தை எந்த நாட்டில் பிறக்கின்றதோ அந் நாட்டில் அக் குழந்தையும் அதன் பெற்றோரும் குடியுரிமை பெற்றுக்கொள்ளலாம். •ஒருவர் சிறந்த கல்வி பெற்றால் அதன் மூலமும் சில நாடுகளில் குடியுரிமை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் இந்தியாவில் 34 வருடங்கள் வாழ்ந்துவரும் ஈழத் தமிழ் அகதி கஜேந்திரனுக்கு குடியுரிமை வழங்க இந்திய அரசு மறுக்கிறது. கஜேந்திரன் கல்வியில் கணிதத்தில் இளங்கலைப்பட்டமும் வர்த்தகத்தில் முதுநிலைப்பட்டமும் பெற்றுள்ளார். கஜேந்திரன் இந்திய பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார். இருவருக்கும் 9 வயதில் மகன் உண்டு. கஜேந்திரன் ஒரு இந்து. அவர் திருமணம் செய்த பெண் இந்து. அவர் மகனும் இந்து. பாகிஸ்தானில் இருந்து வரும் இந்து அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் இந்திய அரசு, ஈழத் தமிழ் அகதி இந்துவாக இருந்தும் குடியுரிமை வழங்க மறுக்கிறது. கஜேந்திரன் தனக்கு குடியுரிமை வழங்குமாறு 2017ல் விண்ணப்பித்துள்ளார். கடந்த 7 வருடங்களாக இந்திய அரசு தனது விண்ணப்பத்தை பரிசீலிக்காததால் அவர் வேறு வழியின்றி நீதிமன்றத்தை நாடியுள்ளார். கஜேந்திரனின் பெயர் தமிழக அரசின் அகதி குறிப்பேடுகளில் கஜேந்திரகுமார் என இருப்பதாக இந்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. குடியுரிமை வழங்காததுடன் அதற்கு ஒரு நகைப்புக்குரிய காரணத்தையும் வெட்கமின்றி இந்திய அரசு கூறியுள்ளது. அவருடைய பெயரை சரி பார்த்து உடன் அவர் மனுவை பரிசீலிக்குமாறு நீதிமன்றம் இந்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இப்போதாவது இந்திய அரசின் ஈழத் தமிழர் மீதான அக்கறை என்ன என்பதை தமிழ் மக்கள் உணர்ந்துகொள்வார்களா?

No comments:

Post a Comment