Friday, March 31, 2017

•சம்பந்தர் அய்யாவின் வரலாற்றுப் பெருமை?

•சம்பந்தர் அய்யாவின் வரலாற்றுப் பெருமை?
செய்தி- காணாமல் போனவர்களின் உறவுகள் சம்பந்தர் அய்யாவின் வீடு முற்றுகை.
இலங்கை தமிழர் வரலாற்றில் எந்தவொரு தமிழ் தலைவரின் வீடும் தமிழ் மக்களால் முற்றுகை இடப்பட்டது கிடையாது.
முதன்முதலாக சம்பந்தர் அய்யாவின் வீடு காணாமல் போனவர்களின் உறவுகளால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
தமிழ் மக்களால் வீடு முற்றுகையிடப்பட்ட தமிழ் தலைவர் என்ற வரலாற்றுப் பெருமையை சம்பந்தர் அய்யா பெற்றுள்ளார்.
இதெல்லாம தனக்கு கேவலம் என்று கருதி சம்பந்தர் அய்யா உடனடியாக பதவியை ராஜினாமா செய்துவிடுவார் என்று யாரும் எதிர்பார்த்துவிடாதீர்கள்.
ஏனென்றால் வெட்கம் மானம் ரோசம் கேவலம் என்றால் அதெல்லாம் கிலோ என்ன விலை என்று கேட்கும் ரகத்தைச் சேர்ந்த அபூர்வமான மனிதர் அவர்.
ஒருவருடத்தில் தீர்வு பெற்று தருவேன் என்று வாக்குறுதியளித்தவிட்டு அதை நிறைவேற்றாதபோது தார்மீகரீதியாக ராஜினாமா செய்யாமல் இருந்து வருபவர்.
மக்கள் வீதிகளில் இறங்கி போராடுகிறார்கள். அவர்களுக்காக அரசிடம் கேட்காதவர் தனக்கு சொகுசு பங்களாவும் சொகுசு வாகனமும் கேட்டு வாங்கி அனுபவிக்கிறார்.
அப்படிப்பட்டவர் தமிழ் மக்கள் தன் வீட்டை முற்றுகையிட்டமைக்காக கொஞ்சமும் வெட்கப்டமாட்டார்.
ஆனால் எனது அச்சமெல்லாம் அந்த முற்றுகையிட்ட அப்பாவி மக்களை தன்னை கொல்ல வந்த பயங்கரவாதிகள் என்று ராணுவத்திற்கு காட்டிக் கொடுத்தவிடப் போகிறார் என்பதே.
இங்கு எனது கேள்வி என்னவெனில் சம்பந்தர் அய்யாவுக்கு வாழ்நாள்வீரர் என்று கனடாவில் பட்டம் கொடுத்தவர்கள் இனி என்ன பட்டம் கொடுக்கப் போகிறார்கள்?

No comments:

Post a Comment