Friday, March 31, 2017

•இது நியாயமா?

•இது நியாயமா?
வாக்கு போட்டவர்களின் பிள்ளைகள் ஓட்டைப் பாடசாலையில் கல்வி கற்கின்றனர்.
ஆனால் அவர்கள் மூலம் பதவி பெற்ற தலைவருக்கு 5 கோடி ரூபாவுக்கு சொகுசு வாகனம் இறக்குமதி செய்யப்படுகிறது.
வன்னியில் மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைக்கு ஒரு நல்ல கூரை போட முடியவில்லை. ஆனால் சம்பந்தர் அய்யாவுக்கு சொகுசு வாகனம் இறக்குமதி செய்ய பாராளுமன்றத்தில் பிரோரணை கொண்டுவரப்பட்டுள்ளது.
ஏற்கனவே சம்பந்தர் அய்யாவுக்கு பல வாகனங்கள் உண்டு. பலத்த பொலிஸ் பாதுகாப்பும் உண்டு. அவர் தங்குவதற்கு கொகுசு பங்களாவும் வழங்கப்பட்டுள்ளது.
இதுபோதாது என்று அவருக்கு மேலும் 5கோடி ரூபாவுக்கு புதிய சொகுசு வாகனம் இறக்குமதி செய்வதற்கு பாராளுமன்றதம்தில் அவசரமாக குறை நிரப்பு பிரோரணை கொண்டு வரப்பட்டுள்ளது.
இதற்கு நன்றி செலுத்துமுகமாக சம்பந்தர் அய்யாவினால் வவுனியாவில் அவசரமாக தமிழ்தேசிய கூட்டமைப்பு கூட்டம் நடத்தி ஜ.நா வில் கால அவகாசம் வழங்க ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்னியில் மக்கள் பல போராட்டங்களை பல நாட்களாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அது பற்றி சம்பந்தர் அய்யாவுக்கு எந்த அக்கறையும் இல்லை. கவலையும் இல்லை.
மக்களின் போராட்டங்கள் குறித்து பேசுவதற்கு சம்பந்தர் அய்யா அவசரமாக கூட்டம் நடத்தவில்லை. மாறாக அரசுக்கு ஆதரவாக கூட்டம் நடத்துகிறார்.
அவரது கவலை எல்லாம் ஜ.நா வில் அரசுக்கு கால அவகாசம் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே.
இதில்கூட மக்களின் போராட்டங்களுக்கு பதில் கூறும்படி அவரால் அரசிடம் கேட்க தோன்றவில்லை.
இது நியாயமா?

No comments:

Post a Comment