Friday, March 31, 2017

•முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியாவது சிறப்புமுகாம்களை மூடுவாரா?

•முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியாவது சிறப்புமுகாம்களை மூடுவாரா?
கலைஞர் கருணாநிதியால் 1990ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சிறப்புமுகாம் என்னும் சித்திரவதை முகாம்; இன்னும் மூடப்படவில்லை.
மாறி மாறி ஆட்சி புரிந்த கலைஞர் கருணாநிதியும் ஜெயா அம்மையாரும் இச் சிறப்புமுகாம்களை மூடி அதில் அடைத்து வைத்திருக்கும் அப்பாவி அகதிகளை விடுதலை செய்யவில்லை.
தற்போது எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழக முதல்வராக இருக்கிறார். அவராவது இக் கொடிய சிறப்புமுகாம்களை மூடி அதில் அடைத்து வைத்திருக்கும் அகதிகளை விடுதலை செய்ய முன்வரவேண்டும்.
அய்யா நெடுமாறன் அவர்கள் தற்போதைய அரசை ஆதரித்துள்ளார். எனவே அவர் இவ் சிறப்புமுகாம்களை மூடுவதற்கு தனது செல்வாக்கினை பயன்படுத்த வேண்டும்.
தமிழக கட்சிகளும் அதன் தலைவர்களும் சிறப்புமுகாம்களை மூடுமாறு தமிழக அரசை வலியுறுத்த வேண்டும்.
தமிழக அரசு சிறப்புமுகாம்களை மூடுவதற்கு முன்வராவிடின் யாராவது வழக்கறிஞர் இது குறித்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
தமிழகத்தில் பல இன உணர்வுள்ள வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் யாராவது இது குறித்து அக்கறை கொள்ள வேண்டும் என தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
அப்பாவி அகதிகள் பல வருடங்கள் இக் கொடிய சித்திரவதை முகாமில் வாடுகிறார்கள். இனியாவது அவர்கள் விடுதலை பெற அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment