Friday, March 31, 2017

•இன்று செருப்பு எறியும் கைகள் நாளை கைக்குண்டுகளை எறியுமா?

•இன்று செருப்பு எறியும் கைகள்
நாளை கைக்குண்டுகளை எறியுமா?
சேலத்தில் முத்துகிருணனுக்கு அஞ்சலி செலுத்த வந்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஸ்ணனுக்கு மாணவர் ஒருவர் செருப்பு வீசியுள்ளார்.
இதேபோன்று கடந்த வருடம் முன்னாள் பாதுகாப்பு செயலர் நாராயணுக்கு பிரபாகரன் என்ற இளைஞர் செருப்பால் அடித்தார்.
காஸ்மீரில் , பாலஸ்தீனத்தில் சிறுவர்கள் ராணுவ வண்டி மீது கல் எறிந்து தாக்குதல் செய்வது போல் தமிழகத்தில் அரசியல்வாதிகள் மீது செருப்பால் தாக்கும் சம்பவங்கள் நிகழுகின்றன.
இச்சம்பவங்கள் மாணவர்களும் இளைஞர்களும் அரசியல்வாதிகள் மீது மிகவும் கோபம் அடைந்த நிலையில் உள்ளனர் என்பதையே காட்டுகின்றது.
தொடர்ந்தும் அரசும் அதன் ஏவல்படையான பொலிசும் அராஜகம் செய்யுமேயானால் அடுத்து மாணவர்கள் கைக்குண்டு வீசவும் தயங்க மாட்டார்கள்.
ஈழத்திலும் ஆரம்பத்தில் இளைஞர்கள் இவ்வாறே செயற்பட்டார்கள். இறுதியில் வேறு வழியின்றி ஆயுதம் ஏந்தினார்கள்.
அNதுபோல் தமிழகத்திலும் இளைஞர்கள் விரைவில் கைக்குண்டுகளை எறியப்போகிறார்கள் என்பதன் வெளிப்பாடே இந்த செருப்பெறி நிகழ்வுகள்.
செருப்பெறிந்து தமது நியாயமான கோபத்தை வெளிப்படுத்தும் மாணவர்களையும் இளைஞாத்களையும் பாராட்டுவோம். வாழ்த்துவோம்.
இங்கு வேடிக்கை என்னவெனில் பாலஸ்தீனத்தில் கல் எறியும் சிறுவர்களின் போராட்டத்தை வாழ்த்தி வரவேற்போர் சிலர் தமிழகத்தில் செருப்பெறிவதை கண்டிக்கின்றனர்.
அதுமட்டுமன்றி பகத்சிங் பாராளுமன்றத்தில் கைக்குண்டு வீசியதை சுதந்திரப் போராட்டம் என்போர் ஊழல் பேர்வழி அமைச்சர்கள் மீது செருப்பு எறிவதை வன்முறை என்று கண்டிக்கின்றனர்.
பகத்சிங்கை தியாகி என்று அழைக்கும் சிலர் குண்டு வீசிய தோழர் தமிழரசனை பயங்கரவாதி என்கின்றனர். தமிழரசன் தமிழன் என்றபடியால்தானா இந்த பாகுபாடு?

No comments:

Post a Comment