Friday, March 31, 2017

•வோட்டு போட்;டு பதவியை தந்த மக்கள் காலில் விழுந்து வணங்கி மன்றாடி கேட்கின்றனர்.

•வோட்டு போட்;டு பதவியை தந்த மக்கள்
காலில் விழுந்து வணங்கி மன்றாடி கேட்கின்றனர்.
தமது குறைகளை தீர்த்து வைப்பார்கள் என்று நம்பி வோட்டு போட்ட மக்கள் இன்று ஏமாற்றம் அடைந்து இருக்கிறார்கள்.
வேறுவழியின்றி எல்லா தலைவர்கள் காலிலும் விழுந்து வணங்கி மன்றாடி கேட்கின்றனர். தமிழ் தலைவர்களின் கால்களில் மட்டுமல்ல சிஙகள தலைவர்கள் காலிலும் விழுந்து வணங்கி கேட்கின்றனர்.
ஆனால் தலைவர்களின் மனமோ இன்னும் இரங்கவில்லை. மக்களின் குறைகளை தீர்க்க அவர்கள் எண்ணுவதில்லை.
யாழ்ப்பாணத்திற்கு வந்த பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரோன் முதல் அனைவரிடமும் கெஞ்சிக் கேட்டு விட்டார்கள். ஆனால் இந்த காணாமல் போனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு மட்டும் கிடைக்கவில்லை.
ஒருவருடத்தில் தீர்வு பெற்று தருவேன் என்று வாக்குறுதியளித்த சம்பந்தர் அய்யா அதனை நிறைவேற்றவில்லை. மாறாக தனக்கு பதவி மற்றும் பங்களா பெற்றுள்ளார்.
மக்களின் குறைகளைப் பற்றி பாராளுமன்றத்தில் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட சம்பந்தர் அய்யா தனக்கு சொகுசு வாகனம் இறக்கும் குறைநிரப்பு பிரோரணை பற்றி பேசுகிறார்.
மாகாணசபை முதல்வர் விக்கினேஸ்வரன் லண்டன் கனடா சென்று நகர ஒப்பந்தங்கள் போடுவதில் செலுத்தும் கவனத்தை மக்களின் குறைகளை கேட்டு அதனை நிவர்த்தி செய்ய முனைவதில்லை.
மாகாண முதல்வர் விக்கினேஸ்வரன் சம்பந்தர் அய்யாவை விட பரவாயில்லை. ஏனெனில் மக்கள் குறைகளை சொல்லும் போது அவர் பேப்பர் படிப்பதில்லை. தன்னிடம் திறப்பு இல்லை என்று நக்கலாக பதில் சொல்வதில்லை.
சிங்கள மக்களிடம் தமிழ் மக்களின் பிரச்சனைகளை விளக்கி அவர்களின் ஆதரவை திரட்டுவதற்கு தமிழ் தலைவர் முயற்சி செய்யவில்லை.
ஆனால் அவர்களோ சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்து அதனை சிங்களவர்களுக்கு விற்பனை செய்டது 5 கோடி ரூபாவுக்கு மேல் சம்பாதித்துள்ளார்கள்.
சிறீதரன் எம்.பி தனது சொகுசு வாகனத்தை பத்ரகே பெர்ணாந்து என்ற சிங்களவருக்கும் சிவமோகன் எம்.பி எஸ்டபிள்யு சந்துருவன என்ற சிங்களவருக்கும் சிவசக்தி எம்.பி சேர்டிசு லங்கா என்ற சிங்கள நிறுவனத்திற்கும் விற்று பணம் சம்பாதித்துள்ளனர்.
பாவம் தமிழ் மக்கள், வோட்டு போட்டு பதவியை கொடுத்தது மட்டுமன்றி அவர்கள் காலில் விழுந்து மன்றாட வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
ஆனால் ஏனோ இந்த தலைவர்களுக்கு மக்கள் மீது மட்டும் இரக்கம் வருகுதில்லை!

No comments:

Post a Comment